search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முக்தி அடைந்த தினம் திருவாலங்காடு கோவிலில் காரைக்கால் அம்மையார் விழா நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது
    X

    முக்தி அடைந்த தினம் திருவாலங்காடு கோவிலில் காரைக்கால் அம்மையார் விழா நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது

    முக்தி அடைந்த தினம் திருவாலங்காடு கோவிலில் காரைக்கால் அம்மையார் விழா நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது

    செவ்வாய்பேட்டை, மார்ச். 31-

    திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் வடரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிவன் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். வண்டார்குழலி அம்மன் அருள்பாலிக்கிறார், காரைக்கால் அம்மையார் இந்த தலத்தில் தான் முக்தி அடைந்தார்.

    அவர் முக்தி அடைந்த தினம் ஏப்ரல் 2-ந் தேதி ஆகும். இதையடுத்து இந்த கோவிலில் காரைக்கால் அம்மையார் விழா நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.

    நாளை (1-ந் தேதி) இரவு 10 மணிக்கு விழா தொடங்குகிறது. அப்போது காரைக்கால் அம்மையார் புஷ்பநாக உற்சவம் மற்றும் பரிகார பூஜை நடக்கிறது.

    நாளை மறுநாள் (2-ந் தேதி) காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற நாள் என்பதால் அன்று அவர் திருவாலங்காட்டை சுற்றியுள்ள கிராமங்களை வலம் வரும் வீதிஉலா நடக்கிறது.

    அன்று சிறப்பு பூஜை, அன்னதானமும் நடக்கிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.

    Next Story
    ×