search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்
    X

    பழனி முருகன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

    பழனி முருகன் கோவிலில் நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்களும், கலச அபிஷேகமும் நடந்தது.
    பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த 24-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் 6-ம் திருநாளான நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்களும், கலச அபிஷேகமும் நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் துலா லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    அப்போது கூடியிருந்த பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...! வீர வேல் முருகனுக்கு அரோகரா....! ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா....! என்று சரண கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளினார். தேர் சன்னதி வீதி, கிரி வீதிகளில் வலம் வந்தது.
    Next Story
    ×