search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாளை ஜெயந்தி தினம்: மயிலாப்பூர் பாபா கோவிலில் 3 நாட்கள் சிறப்பு அபிஷேகம்
    X

    நாளை ஜெயந்தி தினம்: மயிலாப்பூர் பாபா கோவிலில் 3 நாட்கள் சிறப்பு அபிஷேகம்

    “தென்னக சீரடி” என்று புகழப்படும் மயிலாப்பூர் பாபா ஆலயத்தில் சாய்பாபாவின் அவதார தின விழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    சீரடி சாய்பாபா, கலியுக மக்களின் கர்மாக்களை அழித்து கருணைக் காட்ட வந்த கண்கண்ட தெய்வம் என்ற உண்மையை பரப்பியவர்களில் தமிழகத்தை சேர்ந்த நரசிம்ம சுவாமிஜி முக்கியமானவர். இவர்தான் சென்னை மயிலாப்பூரில் சாய்பாபா ஆலயத்தை உருவாக்கினார்.

    “தென்னக சீரடி” என்று புகழப்படும் இந்த ஆலயத்தில் சாய்பாபாவின் அவதார தின விழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இன்று மாலை 6.30 மணிக்கு தூப் ஆரத்தி, 7 மணிக்கு சுவாமிஜி எழுதிய புத்தகங்கள் வெளியீடு, இரவு 9 மணிக்கு ஷேஜ் ஆரத்தி நடைபெறும்.

    நாளை (25-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு நடை திறப்பு, 5.05-க்கு காகட ஆரத்தி, 6 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை 8.55-க்கு பஜன்ஸ் நடைபெறும். 9 மணிக்கு சாய்பாபாவுக்கு சிறப்பு ருத்ர மகா அபிஷேகம் நடைபெறும்.

    மதியம் 12 மணிக்கு மதிய ஆரத்தி, பிற்பகல் 3 மணிக்கு குரான் சொற்பொழிவு, 5 மணிக்கு ராமபஜனை சொற்பொழிவு, 6.30 மணிக்கு தூப் ஆரத்தி நடைபெறும். இரவு 7.45 மணிக்கு சீரடி சாய்பாபா உற்சவர், ராமர், நரசிம்ம சுவாமிஜி ஆகியோரது சிலைகள் வீதி உலா நடைபெறும். கபாலீஸ்வரர் ஆலய மாட வீதிகள் சுற்றி வரப்படும். பிறகு இரவு நேர ஷேஜ் ஆரத்தி நடத்தப்படும்.

    மூன்றாவது நாளான 26-ந்தேதி அதிகாலை 5.05 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு சகஸ்ரநாமம், 10 மணிக்கு உற்சவர் அபிஷேகம், 12 மணிக்கு மதிய ஆரத்தி நடைபெறும். மாலை 6.30 மணிக்கு தூப் ஆரத்தி, இரவு 8 மணிக்கு ஆஞ்சநேயர் பூஜை, 9 மணிக்கு இரவு நேர ஆரத்தி நடத்தப்படும்.

    சாய்பாபா அவதார தின விழா ஏற்பாடுகளை மயிலை ஆலய நிர்வாக செயலாளர் தங்கராஜ், பொருளாளர் செல்வராஜ் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×