search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முட்டபதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது
    X

    முட்டபதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது

    முட்டபதி அய்யா வைகுண்டசாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி அருகே உள்ள முட்டபதியில் அய்யா வைகுண்டசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. முட்டபதி தர்மகர்த்தாக்கள் பாலசுந்தரம், மனோகர செல்வன் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். பகல் 12 மணிக்கு பாற்கடலுக்கு தீர்த்தமாட செல்லும் நிகழ்ச்சி, இரவு வாகன பணிவிடை, அன்ன தர்மம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.

    விழாவில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை பணிவிடை, பால் தர்மம் வழங்குதல், மதியம் உச்சிப்படிப்பு, பால் அன்னதர்மம், இரவு அய்யாவின் வாகன பவனி நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் பணி விடை, உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, அய்யாவின் வாகன பவனி, அன்னதானமும், 30-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு பணிவிடை, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, இரவு 8 மணிக்கு கலிவேட்டையும் நடக்கிறது. இதையொட்டி அய்யா பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி வலம் வருதல், நள்ளிரவு 12 மணிக்கு அய்யா கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

    2-ந் தேதி அதிகாலை பணிவிடை, உகப்படிப்பு, பால் அன்னதர்மம், மாலை 5 மணிக்கு அய்யா சப்பர வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வருதல், அதிகாலை திருஏடு வாசிப்பு ஆகியவை நடக்கிறது. 3-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை முட்டபதி அய்யா வைகுண்டசாமி பதி தர்மகர்த்தாக்கள் மனோகரச்செல்வன், கைலாஷ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×