search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் தூக்கநேர்ச்சையில் பங்கேற்க குழந்தைகள் பெயர் பதிவு
    X

    கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் தூக்கநேர்ச்சையில் பங்கேற்க குழந்தைகள் பெயர் பதிவு

    கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் தூக்கநேர்ச்சையில் பங்கேற்க 1,546 குழந்தைகள் பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
    கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் தூக்க திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

    வருகிற 21-ந்தேதி தூக்க திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி தூக்க நேர்ச்சையில் கலந்து கொள்வதற்காக குழந்தைகளின் பெயர் பதிவு மற்றும் குழந்தைகளை தூக்க வில்லில் தாங்கி செல்லும் தூக்கக்காரர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நேற்று நடந்தது.

    இதில் தூக்கநேர்ச்சையில் பங்கேற்க 1,546 குழந்தைகள் பெயர் பதிவு செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி முதலில் தேர்வு செய்யப்பட்ட குழந்தை தூக்கநேர்ச்சையில் முதலில் கலந்து கொள்ளும்.

    இந்த குழந்தைகள் கோவில் முன் பகுதியில் இருந்து தூக்க வில்லில் ஏற்றப்பட்டு ஒரு முறை சுற்றி வர தூக்க நேர்ச்சை நிறைவேறியதாக கருதப்படும். இந்த நிகழ்ச்சியில் 6 மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    காப்பு கட்டிய தூக்கக்காரர்கள் தூக்கநேர்ச்சை முடியும் வரை கோவில் வளாகத்திலேயே தங்குவார்கள். இவர்கள் தினமும் காலையும், மாலையும் அருகில் உள்ள கடலில் நீராடி கோவில் வளாகத்தில் சூரிய நமஸ்காரம் பயிற்சியை செய்வார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக்குழு தலைவர் வி.சதாசிவன் நாயர், செயலாளர் மோகன்குமார் தலைமையில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×