search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முக்தீஸ்வரர் கோவில் கருவறையில் சூரியக்கதிர்கள்
    X

    முக்தீஸ்வரர் கோவில் கருவறையில் சூரியக்கதிர்கள்

    முக்தீஸ்வரர் கோவிலில் நேற்று முதல் கருவறையை நோக்கி சூரியக்கதிர்கள் விழத்தொடங்கின. இதை பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். இந்த அபூர்வ நிகழ்வு இன்னும் சில நாட்கள் நீடிக்கும்.
    சூரியக்கதிர்கள் கருவறையில் உள்ள சிவபெருமானின் லிங்கத் திருமேனியில் படருவதை சூரிய பூஜை என்று பக்தர்கள் பரவசத்துடன் குறிப்பிடுகிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலான தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் கருவறையிலும் சூரியக்கதிர்கள் குறிப்பிட்ட நாட்களில் சாமியின் மீது விழுகின்றன.

    ஆண்டுதோறும் மார்ச் 2-வது வாரம் காலை நேரத்தில் கருவறைக்கு எதிரே உள்ள துவாரங்கள் வழியாக சூரியக்கதிர்கள் ஊடுருவுகின்றன. பின்பு 2-வது முறையாக செப்டம்பர் 3-வது, 4-வது வாரங்களில் கருவறையில் சூரிய ஒளிபடும். முதலில் மஞ்சள் நிறத்திலும், பின்பு கண்கள் கூசும் வகையில் வெள்ளொளியாகவும் தெரியும். சூரிய பூஜையின் 15 நிமிட இடைவெளியின் போது கோவில் சார்பில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம் செய்யப்படும்.

    இந்த ஆண்டு நேற்று முதல் கருவறையை நோக்கி சூரியக்கதிர்கள் விழத்தொடங்கின. இதை பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். இந்த அபூர்வ நிகழ்வு இன்னும் சில நாட்கள் நீடிக்கும்.
    Next Story
    ×