search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு காலம், எமகண்ட நேரத்தை கண்டுபிடிக்க சுலபமான வழி
    X

    ராகு காலம், எமகண்ட நேரத்தை கண்டுபிடிக்க சுலபமான வழி

    நம் வாழ்க்கையில் ராகுகாலம், எமகண்டம் இவற்றைப் பார்த்தே பல செயல்களைச் செய்கின்றோம். இதை எளிதில் நினைவே வைத்துக் கொள்ள எளிமையான வழிமுறைகள்.
    நம் வாழ்க்கையில் ராகுகாலம், எமகண்டம், குளிகை காலம். இவற்றைப் பார்த்தே பல செயல்களைச் செய்கின்றோம். ஆனால் இவற்றை நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். இதை எளிதில் நினைவே வைத்துக் கொள்ள எளிமையான வழிமுறைகள்.

    இராகு காலம் நேரம் :

    தினந்தோறும் ராகுவால் ஆளப்படுகின்ற 1.30மணி  நேரமே ராகுகால நேரம் என அழைக்கப்படுகிறது. இந்த நேரம் கெட்ட நேரமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    திருவிழா சந்தையில் வெண்  புட்டு  விற்க சென்றான் ஞானம்

    ராகு காலம் முதலில் ஆரம்பிப்பது திங்கட்கிழமையாகும்.

    திங்கள் =காலை  7.30 - 9.00
    சனி = 09.00 - 10.30
    வெள்ளி = 10.30 - 12.00
    புதன் = மதியம் 12.00 - 01.30
    வியாழன் = 01.30 - 03.00
    செவ்வாய் = 03.00 - 04.30
    ஞாயிறு = 04.30 - 06.00

    எமகண்டம் :

    எமகண்ட நேரம் 1.30மணி   இது கெட்ட நேரமாக கருதப்படுகிறது.எமனுக்கு ஏற்ற நேரம்.இவர் குருவின் புதல்வர் ஆவதால் வியாழக் கிழமையையே முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு பின்னோக்கி கிழமைகளை புதன்,செவ்வாய்,திங்கள்,ஞாயிறு,சனி,வெள்ளி என்று நினைவில் வைத்துக் கொண்டால் எமகண்ட நேரம் சரியாக இருக்கும்.

    கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில்



    வியாழன் =காலை 6.00--7.30
    புதன் : 07.30 - 09.00
    செவ்வாய் : 09.00 - 10.30
    திங்கள் : 10.30 - 12.00
    ஞாயிறு : மதியம் 12.00 - 01.30
    சனி : 01.30 - 03.00
    வெள்ளி : 03.00 - 04.30

    இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.

    குளிகை :

    குளிகை காலத்தின் அளவு 1.30மணி நேரம் .குளிகன் என்பவர் சனியின் மைந்தன்.குளிகை காலம் ஆரம்பிப்பது முதலில் சனிக்கிழமை,பின்பு மற்ற நாட்களை பின்னோக்கினால் சனிக்கப் பின்,வெள்ளி,வியாழன்,புதன்,செவ்வாய்,திங்கள்,ஞாயிறு என்று கணக்கில் கொள்ளவும்.குளிகை காலமும் கெட்ட நேரமாகும்.இதில் ஆரம்பிக்கும் எந்த செயலும் முற்றுப் பெறாது மீண்டும் தொடரும் என்று கருதப்படுகிறது.

    கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்

    சனி =காலை 06.00 - 07.30
    வெள்ளி = 07.30 - 09.00
    வியாழன் = 09.00 - 10.30
    புதன் = 10.30 - 12.00
    செவ்வாய் = மதியம் 12.00 - 01.30
    திங்கள் = 01.30 - 03.00
    ஞாயிறு = 03.00 - 04.30
    Next Story
    ×