search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம்
    X

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம்

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான இன்று(வியாழக்க்கிழமை) நடந்தது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.   

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான இன்று(வியாழக்க்கிழமை) நடந்தது. இதையட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 5.55 மணிக்கு சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தார்.  பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி - தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளினார். பின்பு காலை 6.45 மணிக்கு  தேரோட்டம் தொடங்கியது.



    திருச்செந்தூர் சுப்பிர மணியசுவாமி கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், கதிரேச ஆதித்தன் ஆகியோர் தேரை வடம் பிடித்து  இழுத்தனர். இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ,  திருச்செந்தூர் உதவி கலெக்டர் தங்கவேலு, கோவில் இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ராமசாமி, அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன், காயாமொழி முப்பிராதி அம்மன் கோவில் அக்தார் டாக்டர் பாலசுப்பிரமணியஆதித்தன், எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், கல்வீடு முருகன் ஆதித்தன், கல்வீடு பாலன் ஆதித்தன்,

    பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், குமரேச ஆதித்தன், சிவனேச ஆதித்தன், முருகன் ஆதித்தன், ஜெயகுமார் ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன்,  ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோவில் பரம்பரை அக்தார் கருத்தபாண்டி நாடார், இந்து முன்னணி மாநில  பொதுச்செயலாளர் டாக்டர் அரசு ராஜா,  துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேலன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் காந்தி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கதலைவர் திருப்பதி மற்றும்  பலர் கலந்து கொண்டனர்.    

    தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    Next Story
    ×