search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கள்ளழகர் கோவில் தெப்பத்திருவிழா மார்ச் 1-ந்தேதி நடக்கிறது
    X

    கள்ளழகர் கோவில் தெப்பத்திருவிழா மார்ச் 1-ந்தேதி நடக்கிறது

    மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான மாசி மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழா மார்ச் 1-ந்தேதி நடக்கிறது.
    மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழாவை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5.15 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் கஜேந்திர மோட்சம் நடைபெறும்.

    தொடர்ந்து மார்ச் 1-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீன லக்னத்தில் கோவிலை விட்டு சுவாமி தெப்பத்திற்கு மேள தாளங்கள் முழங்க தீ வட்டி பரிவாரங்களுடன் புறப்பாடாகி, ஸ்ரீதேவி, பூமி தேவியருடன் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைக்கரைபட்டி புஸ்கரணி தெப்பத்திற்கு செல்கிறார். வழி நெடுகிலும் பக்தர்களுக்கு சேவை சாதித்து அருள் புரிந்து தெப்பக்குளத்தை சுற்றி வருகிறார்.

    அன்று பகல் 12.30 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் தெப்பத்தில் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு பெருமாளுக்கும், தேவியர்களுக்கும் விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறும். அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

    தொடர்ந்து மாலையில் வந்த வழியாகவே சென்று கோவிலுக்குள் போய் சுவாமி இருப்பிடம் சேர்வார். இந்த விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×