search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கற்பகவிருட்ச வாகனத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    கற்பகவிருட்ச வாகனத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    காவிரி நீரால் ஸ்ரீரங்கம் கோவில் தெப்பக்குளம் நிறைந்தது

    ஸ்ரீரங்கம் கோவில் தெப்பத்திருவிழாவையொட்டி காவிரி ஆற்றில் மணல் திட்டு அமைத்து கொண்டுவரப்பட்ட காவிரி நீரால் தெப்பக்குளம் நிறைந்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை இவ்விழா நடைபெறும். தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2-ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்தார். நேற்று கற்பகவிருட்ச வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தெப்பத்திருவிழாவின் 4-ம் நாளான இன்று (புதன் கிழமை) மாலை வெள்ளி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதையொட்டி இன்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 12 மணிக்கு ஆஸ்தான மண்டபம் வந்து சேருகிறார்.


    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தெப்ப உற்சவம் வருகிற 25-ந் தேதி நடக்கிறது. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் அல்லூர் அருகே காவிரி ஆற்றில் மணல் திட்டு அமைத்து தண்ணீரை தேக்கி குளத்திற்கு திருப்பி விட்டனர். இந்த தண்ணீர் தெப்பக்குளத்திற்கு வந்து சேர்ந்தது. இதனால் குளம் நிரம்பி இருப்பதை படத்தில் காணலாம்.

    மாலை 6 மணிக்கு அங்கிருந்து வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபம் வந்து சேருகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 25-ந் தேதி நடைபெறுகிறது. தெப்பஉற்சவம் நடைபெறும் மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் அல்லூர் அருகே காவிரி ஆற்றில் மணல் திட்டு அமைத்து தண்ணீரை தேக்கி குளத்திற்கு திருப்பி விட்டனர்.

    இந்த தண்ணீர் அணைக்கரை வாய்க்கால் வழியாக தெப்பக்குளத்திற்கு வந்து சேர்ந்தது. குளத்தில் தண்ணீர் நிரம்பியதையடுத்து தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெறும் என பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    Next Story
    ×