search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா 20-ந்தேதி கொடியேற்றம்
    X

    வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா 20-ந்தேதி கொடியேற்றம்

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ்நகரில் வென்னிமலை முருகன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    முதல்நாள் திருவிழா பாவூர்சத்திரம் காமராஜ்நகர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்படுகிறது. 20-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு கொடி ஏற்றம் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், 12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு 1,008 விளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு சுவாமி வீதி உலா மற்றும் கோவில் வளாகத்தில் இசை கச்சேரி ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை ஆகியன நடக்கிறது. 11-ம் திருவிழாவான வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×