search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவராத்திரி - நான்கு யாம வழிபாட்டுக்கு தேவையான திரவியங்கள்
    X

    சிவராத்திரி - நான்கு யாம வழிபாட்டுக்கு தேவையான திரவியங்கள்

    சிவராத்திரியான இன்று சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
    சிவராத்திரியான இன்று சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
     
    முதல் யாமம் :

    வழிபட வேண்டிய மூர்த்தம் -- சோமாஸ்கந்தர்
    அபிஷேகம் -- பஞ்சகவ்யம்
    அலங்காரம் -- வில்வம்
    அர்ச்சனை -- தாமரை, அலரி
    நிவேதனம் -- பால் அன்னம்,சக்கரைபொங்கல்
    பழம் -- வில்வம்
    பட்டு -- செம்பட்டு
    தோத்திரம் -- இருக்கு வேதம் , சிவபுராணம்
    மணம் -- பச்சைக் கற்பூரம்,தேர்ந்த சந்தணம்
    புகை -- சாம்பிராணி, சந்தணக்கட்டை
    ஒளி -- புட்பதீபம்

    இரண்டாம் யாமம் :

    வழிபட வேண்டிய மூர்த்தம் -- தென்முகக் கடவுள்
    அபிஷேகம் -- பஞ்சாமிர்தம்
    அலங்காரம் -- குருந்தை
    அர்ச்சனை -- துளசி
    நிவேதனம் -- பாயசம், சர்க்கரைப் பொங்கல்
    பழம் -- பலா
    பட்டு -- மஞ்சள் பட்டு
    தோத்திரம் -- யசுர்வேதம் ,கீர்த்தித் திருவகவல்
    மணம் -- அகில், சந்தனம்
    புகை -- சாம்பிராணி, குங்குமம்
    ஒளி -- நட்சத்திரதீபம்



    மூன்றாம் யாமம் :

    வழிபட வேண்டிய மூர்த்தம் -- லிங்கோற்பவர்
    அபிஷேகம் -- தேன், பாலோதகம்
    அலங்காரம் -- கிளுவை, விளா
    அர்ச்சனை -- மூன்று இதழ்வில்வம்,சாதி மலர்
    நிவேதனம் -- எள்அன்னம்
    பழம் -- மாதுளம்
    பட்டு -- வெண்பட்டு
    தோத்திரம் -- சாம வேதம், திருவண்டப்பகுதி
    மணம் -- கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
    புகை -- மேகம், கருங் குங்கிலியம்
    ஒளி -- ஐந்துமுக தீபம்

    நான்காம் யாமம் :

    வழிபட வேண்டிய மூர்த்தம் -- சந்திரசேகரர்(இடபரூபர்)
    அபிஷேகம் -- கருப்பஞ்சாறு, வாசனை நீர்
    அலங்காரம் -- கரு நொச்சி
    அர்ச்சனை -- நந்தியாவட்டை
    நிவேதனம் -- வெண்சாதம்
    பழம் -- நானாவித பழங்கள்
    பட்டு -- நீலப் பட்டு
    தோத்திரம் --அதர்வணவேதம்,போற்றித் திருவகவல்
    மணம் -- புணுகு சேர்ந்த சந்தணம்
    புகை -- கர்ப்பூரம், இலவங்கம்
    ஒளி -- மூன்று முக தீபம்
    Next Story
    ×