search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தைப்பூச குரு வழிபாடு
    X

    தைப்பூச குரு வழிபாடு

    தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
    திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரம்மஹத்தி கோவில் வாசலில் நின்று விட்டதால், அங்கு கோவிலின் வாயிலில் ஒரு பிரம்மஹத்தி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் பார்வதியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம்.

    பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார். சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன. தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

    Next Story
    ×