search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் சிலை ரகசியங்கள்
    X

    பழனி முருகன் சிலை ரகசியங்கள்

    பழனியில் இருக்கும் முருகனின் சிலையானது 18சித்தர்களுள் ஒருவரான போகர் என்பவரால் நவபாஷானத்தை கொண்டு உருவாக்கப்பட்டதாம்.
    பழனியில் இருக்கும் முருகனின் சிலையானது 18சித்தர்களுள் ஒருவரான போகர் என்பவரால் நவபாஷானத்தை கொண்டு உருவாக்கப்பட்டதாம். நவபாஷாணம் என்பது மிக வேகமாக இறுகும் தன்மை உடையதாகும். போகர் முருகனின் முகத்தை வடிவமைக்கவே அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் மற்ற பகுதிகளை முகம் அளவிற்கு கலைநயமாக வடிக்க முடியாமல் போய்விட்டதென்று சொல்லப்படுகிறது.

    ஆதி காலத்தில் கோயில் இன்றி வெறும் முருகன் சிலை மட்டுமே வழிபடப்பட்டு வந்திருக்கிறது. பின்னர் காலப்போக்கில் கவனிப்பார் இன்றி சிலை எங்கோ காட்டில் தொலைந்து போயிருக்கிறது. பின் பல காலம் கழித்து பெருமாள் என்ற சேர மன்னன் பயணக் களைப்பு காரணமாக பழனி மலையின் அடிவாரத்தில் ஓய்வெடுக்கிறார். அம்மன்னனின் கனவில் தோன்றிய முருகன் தன்னுடைய சிலையை கண்டெடுத்து மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்.

    அதனை தொடர்ந்து சேர மன்னன்பெருமாள் இன்று நாம் காணும் கோயிலை எழுப்பி முருகனை பிரதிர்ஷ்டை செய்திருக்கிறான். பொதுவாக மற்ற கோயில்களில் முருகன் கிழக்கு நோக்கியே காட்சி தருவார் ஆனால் இங்கு மட்டும் மேற்கு நோக்கி இருக்கிறார். மேலும் இங்குள்ள முருகனின் காதுகள் சற்றே பெரியதாக இருக்கும். பக்தர்களின் குறைகளை ஒன்று விடாமல் கேட்பதால் தான் முருகனின் காது பெரியதானதாக பக்தர்களிடையே ஒரு நம்பிக்கை இருக்கிறது.

    விழா பூஜை, சிறு கால பூஜை, கால சாந்தி, உச்சிகால பூஜை, ராஜ அலங்காரம், ராக்கால பூஜை, தங்க வாகன தரிசனம் என தினமும் காலை முதல் இரவு வரை பூஜைகள் நடைபெறுகிறது. பழனி முருகனுக்கு தினமும் பாலும், சந்தனமும், வாசனை திரவியங்களும் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
    Next Story
    ×