search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சங்கடம் தீர்க்கும் சனி பகவான்
    X

    சங்கடம் தீர்க்கும் சனி பகவான்

    நவக்கிரகங்களில் அதிக கவனம் பெறுபவர் சனி பகவான். இந்தியா முழுவதும் உள்ள சில சனீஸ்வர பகவான் கோவில்களைப் பற்றி இங்கு காணலாம்.
    நவக்கிரகங்களில் அதிக கவனம் பெறுபவர் சனி பகவான். அவருக்கான சிறப்பு வழிபாடுகள் ஏராளம். அதேபோல் அவருக்கான ஆலயங்களும் இந்தியாவில் பரவி காணப்படுகின்றன. அவற்றில் விஸ்வரூப தரிசனம் கொண்ட சிலைகளும் அடக்கம். இந்தியா முழுவதும் உள்ள சில சனீஸ்வர பகவான் கோவில்களைப் பற்றி இங்கு காணலாம்.

    திட்வாலா சனீஸ்வரன்

    சனி பகவானுக்கு மும்பை நகரை சுற்றி ஏராளமான கோவில்கள் உள்ளன.

    அதிலும் குறிப்பாக தானே மாவட்டம் திட்வாலா பகுதியை சுற்றி ஏராளமான சனீஸ்வர கோவில்கள் உள்ளன. சனி பகவானை தொல்லையாக நினைக்கும் மக்களுக்கு இடையே, தானே மாவட்ட மக்கள் சனி பகவானை செல்ல பிள்ளையாக பார்க்கிறார்கள்.

    அதனால் ஊருக்கு ஒரு சனி கோவில் என்ற விகிதத்தில், தானே மாவட்டத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன.

    இவை அனைத்திற்கும் திட்வாலா பகுதியில் இருக்கும் ஸ்ரீ சனி கோவில் தலைநகராக அமைந்துவிட்டது.

    20 அடி உயரம் :

    தெலுங்கானா மாவட்டத்தின் மெடாக் மாநில பகுதியின் சின்ன கிராமமான எர்தானூரில் சனீஸ்வர கோவில் அமைந்திருக்கிறது. இதை பெரிய சனி கோவில் என்று அழைக்கிறார்கள். இந்த கோவிலில் 20 அடி உயர சனீஸ்வர பகவானின் சிலை அமைந்திருப்பதால், இதை பெரிய சனி கோவில் என்கிறார்கள்.

    ஆண்டிக்கோலம் :

    சனீஸ்வர கோவில்களிலேயே இது மிகவும் வித்தியாசமானது. காரணம் மொரினா சனீஸ்வரா கோவிலில், சனீஸ்வர பகவான் ஆண்டி வேடத்தில் காட்சித்தருகிறார். மற்ற கோவில்களில் கம்பீரமாகவும், பிரமாண்டமாகவும் வீற்றிருக்கும் சனீஸ்வரர், இந்த கோவிலில் பழநி முருகனை போன்று ஆண்டி வேடம் பூண்டிருப்பதால், பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. சனி பகவானை சாந்த சொரூபியாக பார்க்க, மொரினா கோவிலுக்கு செல்லலாம்.

    திருநள்ளாறு :

    தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகம் பரிட்சையமான சனீஸ்வர கோவில் இது. ஏனெனில் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சிக்கு திருநள்ளாரை தேடி, நாடிச் செல்லாதவர்கள் இருக்கவே முடியாது. அந்தளவிற்கு சனிபகவானின் அருளை வாரி வழங்கும் இடங்களில் திருநள்ளாறுக்கு என தனி மதிப்பு உண்டு. அத்துடன் நவக் கிரக கோவில்களில் திருநள்ளாறு கோவிலும் ஒன்று என்பது தனிசிறப்பு. சனி பகவானின் நேரடி பார்வை பதியும் கோவில் என்ற சிறப்பும் திருநள்ளாறுக்கு உண்டு. இந்த கருத்தை ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் நம்புகிறார்கள். ஏனெனில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும்போது நிலை தடுமாறுவதும், கடந்த பிறகு தன்னிச்சையாக இயக்கம் பெறுவதும் திருநள்ளாறு கோவிலின் நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது.

    உயரமான சிலை:

    இது எர்தானூர் கோவிலை விட பெரிய கோவில் போலும். ஏனெனில் கர்நாடக மாநிலம் பனாஜி பகுதியில் இருக்கும் இந்த சனி கோவிலில் 23 அடி உயர சனீஸ்வர சிலை வைக்கப்பட்டுள்ளது. இதுவே கர்நாடக மாநிலத்தின் மிகப்பெரிய சனீஸ்வர கோவில் என்றும் கூறுகிறார்கள்.

    சனி தாம் :

    இந்தியா முழுவதிலும் சனி பகவானுக்கு கோவில்கள் கட்டப்பட்டிருந்தாலும், டெல்லியில் இருக்கும் ‘சனி தாம்’ கோவில் தனி கவனம் பெறுகிறது. ஏனெனில் இங்கிருக்கும் சனி பகவானின் சிலை பிரமாண்டமானது. வானுயர்ந்து நிற்கும் சனி பகவானை பார்ப்பதற்காகவே சட்தார்பூர் சாலையில் இருக்கும் சனி தாம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

    மண்டேஷ்வர சுவாமி கோவில் :

    தமிழ்நாட்டிற்கு பக்கத்து மாநிலமான ஆந்திராவிலும் சனி பகவானுக்கு கோவில்கள் உள்ளன.

    அதிலும் கோதாவரி மாவட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் பெரும்பாலான கோவில்களில் சனி பகவானே வீற்றிருக் கிறார்.

    குறிப்பாக மண்டேஷ்வர சுவாமி கோவில் சனி வழிபாட்டிற்கான பிரபல கோவில்.

    கிராமத்தில் அமைந்திருக்கும் சின்ன கோவில் என்றாலும், அதன் மீதான நம்பிக்கை பெரிய அளவில் இருப்பதால், இது ஆந்திர மக்களின் சனி வழிபாட்டு தளமாக மாறிவிட்டது.

    தியோனர் ஆலயம் :

    மும்பை நகருக்கு மிக அருகில் இருக்கும் தியோனர் பகுதி, சனீஸ்வர வழிபாட்டிற்கு பிரபலமானது.

    இந்த பகுதியில் சனி தேவாலயம் அமைந்திருப்பதால், சனி பகவானை வழிபட, இந்தியா முழுவதிலுமிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    சிவாஜி சிலைக்கு மிக அருகில் அமைந்திருக்கும் இந்த கோவிலில், சனி பகவான் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
    Next Story
    ×