search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 17-ந்தேதி நடக்கிறது
    X

    தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 17-ந்தேதி நடக்கிறது

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்திவிழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த ஆஞ்சநேயரை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து தரிசனம் செய்கின்றனர்.

    இந்த ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோன்று இந்த ஆண்டுக்கான ஜெயந்திவிழா வருகிற 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகம், ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் லிட்டர் பால், மஞ்சள்பொடி உள்பட 16 வகை பொருட்கள் அடங்கிய அபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு மகாதீபாராதனை, இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேக விழா ஆகியவை நடக்கிறது.

    விழாவையொட்டி காலை 10 மணிமுதல் இரவு நடை அடைக்கும் வரையிலும், கோவில் கலையரங்கம் மற்றும் சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம்.மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மேலும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஒருலட்சம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதில் 75 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை குமரிமாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில், கண்காணிப்பாளர் சிவ.ராமச்சந்திரன், மேலாளர் வெங்கடேஷ், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்களும், ஊர் பொதுமக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
    Next Story
    ×