search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஓரத்தநாடு அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி மற்றும் தேர் திருவிழா இன்று நடக்கிறது
    X

    ஓரத்தநாடு அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி மற்றும் தேர் திருவிழா இன்று நடக்கிறது

    ஒரத்தநாடு தாலுக்கா ஒக்கநாடு கீழையூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர் திருவிழா இன்று (1-ந்தேதி) நடைபெறுகிறது.
    ஒரத்தநாடு தாலுக்கா ஒக்கநாடு கீழையூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர் திருவிழா இன்று (1-ந்தேதி) நடைபெறுகிறது.

    விழாவையொட்டி கடந்த ஒரு மாதமாக மதிவாணன் கலை குழுவினரின் மகாபாரதம் கதாகாலட் சேபம் நடைபெற்று வருகிறது. நேற்று களப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. தீமிதி திருவிழாவில் ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், வன்னிப்பட்டு, காவராப்பட்டு, கருவாக்குறிச்சி உள்ளிட்ட சுமார் 50 கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    தீமிதி மற்றும் தேர் திருவிழாவையொட்டி சுமார் 10 ஆயிரம் பேருக்கு ஒக்கநாடு கீழையூர் கிராம மக்கள அன்னதானம் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அன்று இரவு மேலத்தெரு இளைஞர்கள் இன்னிசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். 3-ந்தேதி இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது.

    விழாவையொட்டி ஒக்கநாடு கீழையூர் கிராம மக்கள், ஒரத்தநாடு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×