search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துவாரகை கிருஷ்ணன் திருக்கோவில் - கன்னியாகுமரி
    X

    துவாரகை கிருஷ்ணன் திருக்கோவில் - கன்னியாகுமரி

    தாணுமாலய சுவாமி கோவில் அமைந்திருக்கும் சுசீந்திரம் ஊருக்கு முன்பு அமைந்திருக்கிறது துவாரகை கிருஷ்ணன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் பழமையான தாணுமாலய சுவாமி கோவில் அமைந்திருக்கும் சுசீந்திரம் ஊருக்கு முன்பு அமைந்திருக்கிறது அருள்மிகு துவாரகை கிருஷ்ணன் திருக்கோவில். கோவிலின் ஒருபுறம் பழையாறும், ஒருபுறம் வயல்வெளிகளும் என இயற்கை எழில் சூழ மன அமைதி தரும் விதத்தில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

    கோவில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோவில் முன்மண்டபம் ஓட்டுப்பணியால் ஆனது. சுற்றாலை மண்டபம் ஒரு பிரகாரம், நடுவில் ஸ்ரீகோயில், கருவறை, அர்த்தமண்டபம், சோபனப்படி, விமானம் என அமைந்துள்ளது.

    கருவறை சிறியது. கல்மண்டபம், மூலவர் கிருஷ்ணன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கல்வெட்டுகளில் காணப்படும் மூலவர் ஆழ்வார் எனப்படுகிறார். பரிவாரா தெய்வங்களாக விநாயகரும், சாஸ்தாவும் அமைந்துள்ளனர். இத்திருக்கேவிலில் 4 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழி இக்கோவிலின் பழமையானது தெரியவருகிறது. கோவிலின் சபை இக்கோவிலுக்கு நித்திய பூஜைக்கு கொடுத்த பொருட்கள் பற்றியும், விளக்கு நிபந்தத்தையும் கூறுகிறது. மேலும் இக்கோவிலுக்கு இரண்டு குளங்கள் சொந்தமாக இருந்ததாகவும், கோவில் 13ம் நூற்றாண்டிற்கு முன்பு கட்டப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

    கோயில் கருவறை அருகே உள்ள பாறையில் காணப்படும் 1239ம் ஆண்டு கல்வெட்டில், “இக்கோயிலில் வடதிருவிதாங்கூரை சேர்ந்த வேதவிற்பன்னரான ஸ்ரீகோவிந்த ப்ரஞ்படரார் ஸ்ரீகான ராமபகவான் என்ற ஞானி இருந்தார். இவரிடம் மாணவர்கள் வேதம் பயின்றனார் அவர்களும் இக்கோயில் அருகில் தங்கியிருந்தனர்.” என்று கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால், 13ம் நூற்றாண்டில் இது வேதபாடசாலையாக இருந்திருப்பதை அறியமுடிகிறது.  ஆனால், இக்காலத்தில் இது வழிபாட்டு கோயிலாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சிறப்பு பூஜைகள் :

    காலை 6 மணி திருநடை திறப்பு, 6.30 மணி  பூஜை, அபிஷேகம், 10 மணி பூஜை. மாலை 5 மணி திருநடை திறப்பு, 6.30 மணி பூஜை, 8 மணி பூஜை, திருநடை அடைப்பு. இக்கோவிலில், கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக நடக்கிறது. புரட்டாசி மாத சனிக்கிழமை விஷேசமானது.
    Next Story
    ×