search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீ வராக மூர்த்தி ஸ்லோகம்
    X

    ஸ்ரீ வராக மூர்த்தி ஸ்லோகம்

    ஸ்ரீ வராக மூர்த்திக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். திருமண தடை நீங்கும்.
    வராக அவதாரத்தில், லக்ஷ்மியிடம், எம்பெருமான் கூறியது.
    ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
    தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;
    ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
    அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;

    “எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும்போது, என்னையே நினத்துக்கொண்டு இருக்கின்றானோ, அவனது கடைசி காலத்தில், மூச்சு, பேச்சின்றி, நாக்கு தடுமாறும் நிலையில், மரக்கட்டையாக இருக்கும்போது, என்னை நினைக்கத்தேவை இல்லை. நானே அவனை வந்து கூட்டிச்செல்வேன். “அஹம் ஸ்மராமி மத்ப்க்தம், நயாமி பரமாம்கதிம்”.

    ஆகையினாலே தான், அதற்கு முன்பே மனத்திலே எம்பெருமானை பிரதிஷ்டை பண்ணி, அவன் திருவடியிலே பக்தியாகிற புஷ்பத்தை இட்டு வணங்க வேண்டும். அந்திம காலம் என்பது எல்லோருக்கும் கட்டாயம் உண்டு. அது நமது கட்டுப்பாட்டிலே இல்லை.

    அதனால் தான், இளமையிலேயே பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். என் திருவடியில் ஆத்மா சமர்ப்பணம் பண்ணினவனைக் கைவிடேன் என்கிறான். அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒருநாளும் நான் கைவிடேன். நானே வந்து அவனை உத்தம கதிக்கு அழைத்துப் போவேன் என்கிறான் வராஹஸ்வாமி.

    எம்பெருமானின் அப்படிப்பட்ட வாக்கு இந்த வராஹ அவதாரத்திலே வெளிப்பட்டதினாலே அது பெருமையும், சிறப்பும் மிக்க அவதாரம். அந்த வாக்கை பூமி பிராட்டி மூன்று முடிச்சுகளாக முடிந்து வைத்துக் கொண்டாளாம். அர்ச்சித்தல், ஆத்மா சமர்ப்பணம், திருநாமம் சொல்லுதல் என்ற மூன்றுக்கும் மூன்று முடிச்சு.

    பகவானின் இந்த மூன்று கட்டளைகளைத்தான் பூமி பிராட்டி தன்னுடைய ஆண்டாள் அவதாரத்திலே நடத்திக் காட்டினாள்.
    Next Story
    ×