search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு-கேது தோஷங்கள் நீங்க ஸ்லோகம்
    X

    ராகு-கேது தோஷங்கள் நீங்க ஸ்லோகம்

    இத்துதிகளை ராகு-கேது பெயர்ச்சி தினமான இன்றும், பொதுவாகவே ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளிலும் பாராயணம் செய்து வர, ராகு-கேது தோஷங்கள் நீங்கி மங்களங்கள் பெருகும்.
    ராகு தியானம் :

    ப்ரணமாமி ஸதா ராஹும் ஸர்பாகாரம் கிரீடினம்
    ஸைம்ஹிகேயம் கராளாஸ்யாம் பக்தானாமபயப் ரதம்
    ராஹும் சதுர்புஜம் சர்மஸூல கட்கவராங்கிதம்
    க்ருஷ்ணமால்யாம்பரதரம் க்ருஷ்ணகந்தானுலே பனம்
    கோமேதகவிபூஷம் சவிசித்ர மகுடான்விதம்
    க்ருஷ்ணஸிம்ஹரதம் மேரும் யாந்தம் சைவாப்ரத க்ஷிணம்.
        
    பொதுப்பொருள்: கிரீடத்தை தரிப்பவரே, நாகத்தின் வடிவை உடையவரே, ஸிம்ஹிகையின் புதல்வரே, ராகு பகவானே நமஸ்காரம். பயங்கரமான முகத்தைக் கொண்டிருந்தாலும் பக்தர்களுக்கு பயமின்மையை அளிப்பவரே, கேடயம், சூலம், கத்தி இவற்றை மூன்று கரங்களிலும் ஒரு கரம் வரத ஹஸ்தமாகவும் கொண்டவரே, கருத்த மாலைகள், வஸ்திரங்களைத் தரிப்பவரே, கருத்த சந்தனத்தை உடலெங்கும் பூசியவரே, கோமேதகம் எனும் ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்டவரே, விந்தையான மகுடம் சூடியவரே, கருமை நிற சிம்ம ரதத்தில் பவனி வருபவரே, மேருமலையை அப்பிரதட்சணமாக சுற்றி வருபவரே, ராகு பகவானே நமஸ்காரம்.                    

    கேது தியானம் :

    தூம்ரவர்ணம் த்வஜாகாரம் கதாவரகரத்வயம்
    சித்ராம்பரதரம் கேதும் சித்ரகந்தானுலேபனம்
    வைடூர்யாபரணம் சைவ வைடூர்ய மகுடோஜ் வலம்
    சித்ரம் கபோதமாருஹ்ய மேரும் யாந்தமதக்ஷிணம்
    கேதும் கராளவதனம் சித்ரவர்ணம் கிரிடீனம்
    ப்ரணமாமி ஸதாதேவம் த்வஜாகாரம் க்ரஹேஸ்வரம்

    பொதுப்பொருள்: செங்கருப்பு நிறம் கொண்டவரே, கொடி போன்ற உருவமுடையவரே, கதையை ஏந்தியவரே, வரமளிக்கும் முத்திரை தரித்தவரே, கேது பகவானே நமஸ்காரம். விசித்திரமான வஸ்திரம் அணிந்தவரே, விசித்திரமாக சந்தனம் பூசியவரே, வைடூர்யங்களால் செய்த ஆபரணங்களைத் தரித்தவரே, பல வண்ணம் கொண்ட புறாவை வாகனமாகக் கொண்டவரே, மேருமலையை அப்பிரதட்சணமாகச் சுற்றுபவரே, கேதுபகவானே நமஸ்காரம்.
    Next Story
    ×