search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விபத்துகள் நேராமல் காக்கும் ஸ்லோகம்
    X

    விபத்துகள் நேராமல் காக்கும் ஸ்லோகம்

    தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்போது இந்தப் பாடல்களைப் பாராயணம் செய்தால் விபத்துகள் ஏதும் நேரிடாமல் நமசிவாய நாமம் காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
    பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
    ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
    கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
    நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.
    விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
    உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
    பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
    நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.
    (நமசிவாய துதி)

    பொதுப்பொருள்:

    நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி அப்பர் பல கடும் சோதனைகளைக் கடந்தார். அவர் அருளிய நமசிவாய பதிகத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்போது இந்தப் பாடல்களைப் பாராயணம் செய்தால் விபத்துகள் ஏதும் நேரிடாமல் நமசிவாய நாமம் காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த மந்திரம் தன்னை ஜபிப்பவரை வழித்துணையாக வந்து காக்கும். 
    Next Story
    ×