search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துன்பங்கள், எதிரிகளின் தொல்லை நீக்கும் வாராகிமாலை
    X

    துன்பங்கள், எதிரிகளின் தொல்லை நீக்கும் வாராகிமாலை

    துன்பம், கஷ்டம் வரும் போது வாராகிமாலையில் எந்த பாடலை பாடி வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    உலகமாரணம் 15:-

    “வரும்துணை யென்று வாராகி என்அன்னையை வாழ்த்தி நிதம்
    பொருந்தும் தகைமையைப் பூணாதவர் புலால் உடலை
    பருந்துங்கழுகும் வெம்பூதமும் வெய்ய பிசாசுகளும்
    விருந்துண்ணப் பட்டுகிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே”

    விளக்கம்:- வாராகி அன்னையை மட்டும் மனதார துதித்து வாழ்த்து பவர்களுக்கு அன்னை என்றும் துணை நிற்பாள் என்றும், அவ்வாறு துதிக்கும் பக்தனுக்கு யாரேனும் இடர்கள் செய்வாராயின் அவர் உடலை வெட்டி வாராகி அன்னை பூதங்களுக்கும், பிசாசுகளுக்கும், பறவைகளுக்கும் விருந்து படைப்பாள். பக்தனை காப்பதில் அவ்வளவு ஆவேசம் அன்னைக்கு.

    பயன்பாடு:- தேவையில்லாமல் நம்மோடு ஒருவர் வீண்வாதிடும் போது இப்பாடலை மனம் ஒன்றி துதித்து வெற்றி பெறலாம்.

    சத்ரு மாரணம் 16:-

    வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலும்
    கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறமான குருதிபொங்கச்
    சேறாக்கும் குங்குமம் கொங்கையிற் பூசம் திலகமிடும்
    மாறாக்கு நேமிபடையாள் வணங்காத வற்கே...

    விளக்கம்:- வாராகியை வணங்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அவளை தூற்றி  பேசகூடாது.அப்படி பேசினால் அவர் குருதியை உறிந்தெடுத்து தன் நெற்றியிலும், நெஞ்சினிலும் பூசி கொள்பவளாம். அதர்வண காளியில் பாரபட்சம் பார்க்காமல் தண்டனை கொடுப்பவள் இவளே. மிகவும் ஆக்ரோஷமிக்கவள் கோபத்தில் .

    பயன்பாடு:- வாராகியை அழைக்கும் போது இப்பாடலை பாடலாம்.

    மிருககுண மாரணம் 17:-

    “பாடகச் சீரடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
    ஓடவிட்டே கை உலக்கை கொண்டு உதிரமெல்லாம்
    கோடகதிட்டு வடித்தெடுத்து ஊற்றி குடிக்கும் எங்கள்
    ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் என் அம்பிகையே...”

    விளக்கம்:- வாராகி என்னும் பஞ்சமியை தொழுத அன்பர்கள் பகைவரை ஓடவிட்டு தன் கையில் இருக்கும் உலக்கை கொண்டு அடித்து உதிரத்தை குடித்தும் தன் நெஞ்சில் பூசியும் தன் ஆவேசத்தை தீர்த்து கொள்பவள் இந்த வாராகி.

    பயன்பாடு:-
    பகைவர் வேண்டும் என்றே துன்புறுத்தும் போது அன்னையை இப்பாடலை பாடி வணங்கலாம்.

    பாவம் மாரணம் 18:-

    “தாமக் குடிலும் குழையும் பொன் னோலையுந் தாமரைப்பூஞ்
    சேமகழலும் துதிக்கவந்தோற்குச் செகமதனில்
    வாமகரள களத்தமை ஆதி வாராகி வந்து
    தீமை பாவத்தைக் கெடுதாண்டு கொள்வாள் சிவசக்தியே”

    விளக்கம்:- கள்ளமில்லா மனதோடு வாராகியை துதிப்பவரை, அன்னை குழந்தையாக தூக்கி கொஞ்சி மகிழ்பவளாம், மனிதனை எத்துணை பாவம் செய்யினும் அதனை மன்னித்து, தன் பக்தனாய் ஏற்று அந்த பாவத்தை ஒரு நொடியில் தீர்த்து நலமுற செய்பவளாம் அன்னை.

    பயன்பாடு:- நாம் தவறு செய்தோம் என நமக்கே தெரிந்தபின் அன்னையை பணிந்து பாவத்தை போக்கி கொள்ளலாம்.

    ஏவல் சத்ரு மாரணம் 19:-


    ஆராகிலும் நமக்கே வினை செய்யின் அவர் உடல்
    கூராகும் வாளுக்கு இரையிடுவாள் கொன்றை வேணியரன்
    சீரார் மகுடத் தடியினை சேர்க்கும் திரிபுரையாள்
    வாராகி வந்து குடியிருந்தாள் என்னை வாழ்விக்கவே...

    விளக்கம்:- வாராகி அடிபணியும் பக்தனுக்கு, யாரேனும் ஏவல், பில்லி, சூனியம் செய்யின் அன்னை கட்டுகடங்கா கோபத்திற்கு ஆளாக்கப்படுவாள். ஆக்ரோஷமாய் எழுந்து வந்து தன் பக் தனுக்கு தீங்கு செய்தவர் உடலை தன் வீரவாளுக்கு அவள் இரையாக்கி விடுவாள் என்பது இப்பாடலின் கூற்று. இவள் அவ தரித்ததே உலக மக்களை காக்க வேண்டும் என்ற நோக்கத் திற்காக மட்டுமே.

    பயன்பாடு:- நமக்கு யாராவது ஏவல் செய்திருப்பின் இப்பாடலை பாராயணம் செய்து நன்மை பெறலாம்.

    பிசாசு மாரணம் 20:-

    தரிப்பாள் கலப்பையென் அம்மை வாராகி என் சத்ருவைப்
    பொரிப்பாள் பொறியெழச் செந்தீயில் இட்டப் பொரிந்ததலை
    நெரிப்பாள் மண்டைதலை மூளை தின்றுபின் நெட்டுடலை
    உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துபவளே...

    விளக்கம்:- வாராகி அன்னை கலப்பை ஏந்துகின்ற மகாசக்தி உடையவள் இந்த கலப்பை தன் பக்தனின் சத் ருவை அழிப்பதற்கே. அதை எப்படி செய்வாள் என்றால் அவளை தீயில் இட்டு அவள் மூளையை எடுத்து நெருப்பினில் வேகவிடுபவளாம். சண்டியை அழைத்து சத்ரு உடலை கூறிட்டு தூளாக்க செய்பவளாம் இந்த வாராகி.

    பயன்பாடு:- வாகன விபத்து காணும் போது இதைபடிக்கலாம்.

    வெற்றி வடிவம்:-21

    “உளராகிலும் உடன் நாடகிலும் அவர் குற்றவரோடு
    யாராகிலும் நமக்கு ஆற்றுவரோ அடல் ஆழியுண்டு
    காரார் கனத்த உலக்கை உண்டு கலப்பை உண்டு
    வாராகி யென்னும் சண்டப் பிரசண்ட வடிவிஉண்டே”

    விளக்கம்:- இந்த உலகத்தில் வாராகி பக்தன் எதிலும் தோல்வி பெறுவது கடினம், அவளுடைய உலக்கை, கலப்பை யானது  பக்தனை எதிரி தாக்கும் அந்த நொடியில் அவளது கரம் கழுத்தை பிடித்து வேறு அண்டத்திற்கு அவன் உடலை தூக்கி எறிந்து  நம் பக்தனை காப்பவள் இந்த வாராகி.

    பயன்பாடு:- அன்னை அருள் உடனே கிடைக்க இப்பாடலை பாடலாம்.

    பக்தனுக்கு ஆசி வழங்குதல்:-22

    “உலக்கை கலப்பை யளிவிடு வாள்கூட ஆழிசங்கம்.
    வலக்கை இடக்கையில் வைத்த வாராகி ஏன் மாற்றவர்கள்
    இறக்கம் இல்லாத எழில் பெறும் சேனை எதிர்வரிலும்
    விலக்க வல்லால் ஒரு மெல்லி தன் பாதம் விரும்புகவே”...

    விளக்கம்:- ஒளி பொருந்திய உடலினாள் உலக்கை, கலப்பை, வாள் ஏந் திய உருவத்தினாள், தன் பக்தனை எதிர்த்து 1000 சேனை ஏறும் எதிரிகள் வந்தாலும் தன்னை பணிந்த பக்தனுக்காக அத்தனை நபர்களையும் வெட்டி வீழ்த்துவாள். தன் முன்னே எதிரியை மண்டியிட செய்பவள் இவள்.

    பயன்பாடு:- எதிரிகளை தவிடு பொடியாக்க இதை படிக்கலாம்.

    பில்லி சூனியம் நீக்குதல்:-23

    தஞ்சம் உண்பாதம் சரணாகதி என்று சார்ந்தவர் மேல்
    வஞ்சனை பில்லி சூனியம் வைத்தவரை
    நெஞ்சம் பிளந்து நிணகுடல் வாங்கி நெறுபிரனில்
    அஞ்சங் கரங்கொண்டு அறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.

    விளக்கம்:-

    வாராகி படைப்பு காரணமே,உலகில் ஏவல், பில்லி சூனியம் இருக்க கூடாது என்பதற்காக மட்டுமே, இந்த உலகம் அவளிடம் தஞ்சம் புகுகின்றதாம், அந்த  உலக  அழுகைக்கு காரணமான ஏவல், பில்லி, சூனியம் செய்தவரை, குடல் பிடுங்கி, நெறுப்பில் வேகவிட்டு 8 கரங்கள் மேலோங்க அறுத்து கூறிடுபவளாம்  இந்த வாராகி.

    பயன்பாடு:- உலகம் இயற்கையால் பாதிப்புக்குள்ளாகும் போது இதை பாடினால் நன்மை பெறலாம்.

    பக்தனை காட்டும் நிலை:-24

    “அலைபட்டு  நெஞ்சம் அலைந்து உயிர்சேர
    கொலைபட்டு உடலம் அலைக்யால் கழுகுகள் சூழ குருதி பொங்க
    தலை கெட்ட வயம் வேறாய்ப் பதைபற்று சாவர் காண்பீர்
    நிலை பெற்ற நேமிப் படையாள் நினையாதவரே

    விளக்கம்:- இந்த உலகில் வாழ்வை வெறுத்தவர்களுக்கு அற்புத கனி இந்த வாராகி, தன்னை இந்த உலகத்தில் தூற்றியவர்கள் எல்லாம் ஆச்சரியமாய் பார்க்கும் அளவிற்கு தன் பக்தனை மாற்றுவாள். தன் பக்தனை அவதூறாக பேசுபவரை வாயடைக்க செய் பவள் இந்த வாராகி தாய்.

    பயன்பாடு:- வாழ்வை வெறுக்கும் நிலை ஏற்பட்டால் அன்னை இப்பாடலின் மூலம் துணை புரிவாள்.
    Next Story
    ×