search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் - 11.6.2019 முதல் 17.6.2019 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் - 11.6.2019 முதல் 17.6.2019 வரை

    ஜூன் மாதம் 11-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 17-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    11-ந்தேதி (செவ்வாய்) :

    * சிவகாசி விஸ்வநாதர் கோவிலில் ரத உற்சவம், இரவு பூ சப்பரத்தில் சுவாமி பவனி வருதல்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    * குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் அம்பாள் திருவீதி உலா.
    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பால்குட ஊர்வலம்.
    * மேல்நோக்கு நாள்.

    12-ந்தேதி (புதன்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி ரத உற்சவம்.
    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி ஆலயத்தில் உற்சவம் தொடக்கம்.
    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா, இரவு புஷ்ப சப்பரத்திம் அம்மன் பவனி.
    * சிவகாசி விஸ்வநாதர் தீர்த்தவாரி, இரவு விருட்ச சேவை.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    13-ந்தேதி (வியாழன்) :

    * முகூர்த்த நாள்.
    * சர்வ ஏகாதசி.
    * நாங்குநேரி ராஜாக்கள்மங்கலம் பெருவேம்புடையார் தர்மசாஸ்தா ஆலயத்தில் வருசாபிஷேகம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் உற்சவம் தொடக்கம்.
    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி புறப்பாடு கண்டருளல்.
    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யானை வாகனத்தில் வீதி உலா.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.*
    * சமநோக்கு நாள்.

    14-ந்தேதி (வெள்ளி) :

    * முகூர்த்த நாள்.
    * பிரதோஷம்.
    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் தோளுக்கினியானிலும் புறப்பாடு.
    * திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
    * தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், மதுரை இம்மையில் நன்மை தருவார், அவநாசியப்பர் ஆலயங்களில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
    * சமநோக்கு நாள்.



    15-ந்தேதி (சனி) :

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருட்ச சேவை.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் சந்திரப் பிரபையிலும் பவனி.
    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி புறப்பாடு கண்டருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    16-ந்தேதி (ஞாயிறு) :

    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சேஷ வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் புறப்பாடு.
    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி.
    * பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் அருளிய லீலை.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    17-ந்தேதி (திங்கள்) :

    * பவுர்ணமி.
    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கருட வாகனத்திலும், தாயார் அன்ன வாகனத்திலும் பவனி.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * சமநோக்கு நாள்.
    Next Story
    ×