search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் 26.2.2019 முதல் 4.3.2019 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் 26.2.2019 முதல் 4.3.2019 வரை

    பிப்ரவரி மாதம் 26-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 4-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    26-ந்தேதி (செவ்வாய்) :

    * கோயம்புத்தூர் கோணியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * ராமேஸ்வரம் ராமநாத சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
    * சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (புதன்) :

    * காளகஸ்தி, திருகோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவ பெருமான் உற்சவம் ஆரம்பம்.
    * கோயம்புத்தூர் கோணியம்மன் புலி வாகனத்தில் பவனி.
    * ராமேஸ்வரம் ராமநாத சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் வீதி உலா.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (வியாழன்) :

    * கோயம்புத்தூர் கோணியம்மன் கிளி வாகனத்தில் புறப்பாடு.
    * திருகோகர்ணம் சிவபெருமான் திருவீதி உலா.
    * ராமேஸ்வரம் ராமநாத சுவாமி வெள்ளி கயிலாய வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் பவனி.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * கீழ்நோக்கு நாள்.

    1-ந்தேதி (வெள்ளி) :


    * ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பவனி வருதல்.
    * கோயம்புத்தூர் கோணியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.



    2-ந்தேதி (சனி) :

    * சர்வ ஏகாதசி.
    * ராமேஸ்வரம் ஆலயத்தில் சுவாமி- அம்பாள் தங்க விருட்ச சேவை.
    * கோயம்புத்தூர் கோணியம்மன் அன்ன வாகனத்தில் பவனி.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * மதுரை கூடலழகர் திருவீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.

    3-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * பிரதோஷம்.
    * காளகஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவபெருமான் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
    * ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் முத்தங்கி சேவை, தங்கப் பல்லக்கில் பவனி.
    * கோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    4-ந்தேதி (திங்கள்) :

    * மகா சிவராத்திரி.
    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் பத்திர தீப உற்சவம் ஆரம்பம்.
    * திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் கோவிலில் பஞ்சமுக அர்ச்சனை.
    * காளகஸ்தி, திருகோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவ பெருமான் விருட்ச சேவை.
    * ராமேஸ்வரம் சுவாமி-அம்பாள் மின்விளக்கு அலங்காரத்தில் வெள்ளி ரதத்தில் பவனி, இரவு தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு.
    * கோயம்புத்தூர் கோணியம்மன் வெள்ளை யானை வாகனத்தில் பவனி.
    * மூங்கிலனை காமாட்சியம்மன் கோவில் பெருந்திருவிழா.
    * கடம்பூர் சண்முகநாதர் ஆலயத்தில் பூக்குழி விழா.
    * மேல்நோக்கு நாள்.

    Next Story
    ×