search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் 12-2-2019 முதல் 18-2-2019 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் 12-2-2019 முதல் 18-2-2019 வரை

    பிப்ரவரி 12-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 18-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    12-ந் தேதி (செவ்வாய்)

    ரத சப்தமி.

    குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் அம்மன் திருமாலை உற்சவம்.

    திருப்பதி வெங்கடேசப் பெருமாள் ரத சப்தமி விழா.

    திருச்செந்தூர் சுப்பிரமணியர் காலை பூங்கோவில் சப்பரத்திலும், இரவு தங்க முத்து கிடா வாகனத்திலும் பவனி.

    திருப்போரூர் முருகப்பெருமான் பிரணவம் உபதேசித்து அருளிய காட்சி.

    மதுரை கூடலழகர் காலை கள்ளழகர் திருக்கோலம், இரவு கருட சேவை.

    திருமயம் ஆண்டாள் உச்சிகொண்டா கூடாரை வள்ளி உற்சவம்.

    கீழ்நோக்கு நாள்.

    13-ந் தேதி (புதன்)

    பீஷ்மா அஷ்டமி.

    கார்த்திகை விரதம்.

    மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேஷ வாகனத்தில் வீதி உலா.

    திருமயம் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல்.

    கும்பகோணம் சக்கரபாணி சக்கர சேஷ வாகனத்தில் பவனி.

    திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை தங்க முத்துக் கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.

    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கருட சேவை.

    கீழ்நோக்கு நாள்.



    14-ந் தேதி (வியாழன்)

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை.

    ஆழ்வார் திருநகரியில் மாசி உற்சவம் ஆரம்பம்.

    காங்கேயநல்லூர் முருகப்பெருமான் தெய்வானை திருமண காட்சி.

    மதுரை கூடலழகர் வெண்ணெய் தாழி சேவை, கிருஷ்ண அலங்கார காட்சியருளல்.

    காரமடை அரங்கநாதர் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.

    திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.

    மேல்நோக்கு நாள்.

    15-ந் தேதி (வெள்ளி)

    முகூர்த்த நாள்.

    திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் சுவாமி காலையில் கோ ரதத்திலும், இரவு வெள்ளி தேரிலும் பவனி.

    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றுதல், தங்க தோளுக்கினியானில் பவனி.

    மதுரை இம்மையில் நன்மை தருவார் விருட்ச வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

    சமநோக்கு நாள்.

    16-ந் தேதி (சனி)

    வைஷ்ணவ ஏகாதசி.

    திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரத்தில் பவனி.

    காரமடை அரங்கநாதர் கருட வாகனத்தில் வீதி உலா.

    பெருவயல் முருகப்பெருமான் காலை சண்முக உற்சவம்.

    காங்கேயநல்லூர் முருகப்பெருமான் ரத உற்சவம்.

    திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் சூர்ணாபிஷேகம்.

    மேல்நோக்கு நாள்.

    17-ந் தேதி (ஞாயிறு)

    முகூர்த்த நாள்.

    பிரதோஷம்.

    திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுக நயினார் காலை சிவப்பு சாத்தி, பகலில் பச்சை சாத்தி வழிபாடு.

    பாளையங்கோட்டை ராமசுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

    மதுரை இம்மையில் நன்மை தருவார் திருக்கல்யாணம்.

    காரமடை அரங்கநாதர் கல்யாண உற்சவம்.

    திருப்போரூர் முருகப்பெருமான் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.

    மதுரை கூடலழகர் உபய நாச்சியார்களுடன் தங்க சிவிகையில் ஏகாந்த சேவை.

    சமநோக்கு நாள்.

    18-ந் தேதி (திங்கள்)

    முகூர்த்த நாள்.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

    ஆழ்வார் திருநகரி பெருமாள் கருட வாகனம்.

    காஞ்சி காமாட்சி அம்மன் வெள்ளி ரதத்தில் வீதி உலா.

    மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் ரத உற்சவம்.

    திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்சம்.

    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் திருமலை ராஜன் பட்டணம் எழுந்தருளல்.

    கும்பகோணம் சக்கரபாணி வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா.

    திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் பவனி.

    மேல்நோக்கு நாள்.
    Next Story
    ×