search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் 15.1.2019 முதல் 21.12019 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் 15.1.2019 முதல் 21.12019 வரை

    ஜனவரி 15-ம் தேதியில் இருந்து ஜனவரி 21-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    15-ந் தேதி (செவ்வாய்) :

    பொங்கல் திருநாள்.
    சபரிமலை மகர ஜோதி தரிசனம்.
    அனைத்து சிவன் கோவில்களிலும் அயன தீர்த்தம்.
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலி கட்டின திருவிளையாடல்.
    மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோவிலில் கல் யானைக்கு கரும்பு அளித்த லீலை.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நின்ற திருக்கோல காட்சி.
    காஞ்சி உலகளந்த பெருமாள் கருட சேவை.
    சமநோக்கு நாள்.

    16-ந்தேதி (புதன்) :

    மாட்டுப் பொங்கல்.
    திருவள்ளுவர் தினம்.
    கார்த்திகை விரதம்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க தோளுக்கினியானில் பெரியாழ்வார் சன்னிதிக்கு எழுந்தருளி, இரவு ஆண்டாள் சன்னிதியில் முத்துக்குறி கண்டருளல்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், சுவாமி நந்தீஸ்வரர் வாகனத்திலும், அம்பாள் யாழி வாகனத்திலும் பவனி.
    காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபால சுவாமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சிறிய வைர தேரில் உற்சவம்.
    கீழ்நோக்கு நாள்.

    17-ந் தேதி (வியாழன்) :

    சர்வ ஏகாதசி.
    திருச்சேறை சாரநாதர் ராம அவதார காட்சி, இரவு அனுமன் வாகனத்தில் வீதி உலா.
    குன்றக்குடி சிவபெருமான் தங்க ரதத்தில் வீதி உலா.
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவில் தெப்ப உற்சவம், இரவு தங்க குதிரை வாகனத்தில் சூரசம்ஹாரம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப் பல்லக்கில் வீதி உலா.
    கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி யாழி வாகனத்தில் பவனி வருதல்.
    கீழ்நோக்கு நாள்.

    18-ந்தேதி (வெள்ளி) :


    பிரதோஷம்.
    கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி அன்ன வாகனத்தில் பவனி.
    காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில் ரத உற்சவம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் காலை எடுப்பு தேர், இரவு சப்தாவரணம்.
    திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வீதி உலா.
    திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
    மேல்நோக்கு நாள்.

    19-ந்தேதி (சனி) :

    குன்றக்குடி முருகப்பெருமான் ஆலயத்தில் வெள்ளி ரதம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் காலை தங்கப் பல்லக்கில் சுவாமி- அம்பாள் விருட்ச சேவை.
    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி திருவீதி உலா.
    கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் சுவாமி மயில் வாகனத்தில் புறப்பாடு.
    திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிஷேகம், இரவு பூ சப்பரத்தில் பவனி.
    சமநோக்கு நாள்.

    20-ந்தேதி (ஞாயிறு) :

    பவுர்ணமி.
    திருநெல்வேலி டவுண் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் வருசாபிஷேகம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கதிரறுப்பு நிகழ்வு.
    பழனி முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்.
    கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்.
    காஞ்சி உலகளந்த பெருமாள் சாற்று முறை.
    திருப்புடைமருதூர், திருவிடைமருதூர், குன்றக்குடி ஆகிய தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.
    திருச்சேறை சாரநாதர் வெண்ணெய் தாழி சேவை.
    சமநோக்கு நாள்.

    21-ந்தேதி (திங்கள்) :

    தைப்பூசம்.
    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் ரத உற்சவம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வண்டியூரில் எழுந்தருளி தெப்ப உற்சவம்.
    குன்றக்குடி முருகப்பெருமான் ஆலயத்தில் தெப்ப உற்சவம்.
    சகல முருகன் கோவில்களிலும் தைப்பூச திருவிழா.
    வடலூர் ராமலிங்க அடிகளார் அருட்பெருஞ்ஜோதி தரிசனம்.
    சமயபுரம் மாரியம்மன் வட காவிரிக்கு கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளல்.
    மேல்நோக்கு நாள்.

    Next Story
    ×