search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் 11.12.2018 முதல் 17.12.2018 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் 11.12.2018 முதல் 17.12.2018 வரை

    டிசம்பர் 11-ம் தேதி முதல் டிசம்பர் 17-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    11-ந்தேதி (செவ்வாய்) :

    * சதுர்த்தி விரதம்.
    * திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ரத உற்சவம்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ஆண்டாள் திருக்கோலம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கோதண்டராமர் திருக்கோலமாய் காட்சி தருதல்.
    * குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.
    * மேல்நோக்கு நாள்.

    12-ந்தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம்.
    * காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், காலிங்கநர்த்தன காட்சி.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கண்ணன் திருக்கோலமாய் காட்சி தருதல்.
    * மேல்நோக்கு நாள்.

    13-ந்தேதி (வியாழன்) :

    * முகூர்த்த நாள்.
    * சஷ்டி விரதம்.
    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம், வெள்ளி சீவிகையில் சுவாமி பவனி.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பரமபத நாதராய் திருக்காட்சி அருளல்.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர், காஞ்சி வரதராஜர் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    14-ந்தேதி (வெள்ளி) :

    * முகூர்த்த நாள்.
    * வள்ளியூர் சுப்பிரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம்.
    * திருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை, சிதம்பரம், சுசீந்திரம் ஆகிய தலங்களில் திருவாதிரை உற்சவம் ஆரம்பம்.
    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் யோகாம்பிகை வடிவமாய் திருக்காட்சி.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்சம்.
    * கும்பகோணம் சாரங்கபாணி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், வாகாசூரவதம் திருக்கோலமாய் காட்சி.
    * மேல்நோக்கு நாள்.



    15-ந்தேதி (சனி) :

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் முதல் அமைச்சர் திருக்கோலமாய் காட்சி அளித்தல்.
    * சிதம்பரம் சிவபெருமான் காலை சந்திர பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் பவனி.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருவீதி உலா.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பகல் பத்து உற்சவ சேவை.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பட்டாபிராமர் திருக்கோலக் காட்சி.
    * கீழ்நோக்கு நாள்.

    16-ந்தேதி (ஞாயிறு) :

    * மார்கழி மாத பூஜை ஆரம்பம்.
    * அனைத்து ஆலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம்.
    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் திரிபுர சம்ஹார லீலை, இரவு கயிலாச பர்வத வாகனத்தில் சுவாமி வீதி உலா.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோவர்த்தன லீலை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருவரகுணமங்கை ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், முரளி கண்ணன் திருக்கோல காட்சி.
    * மேல்நோக்கு நாள்.

    17-ந்தேதி (திங்கள்) :

    * குற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பாடு.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் மாலை முத்துக்குறி கண்டருளல்.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நாச்சியார் திருக்கோலத்துடன் அர்ச்சுனன் மண்டபம் எழுந்தருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், மோகன அவதாரம்.
    * சமநோக்கு நாள்.

    Next Story
    ×