search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் 27.11.2018 முதல் 3.12.2018 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் 27.11.2018 முதல் 3.12.2018 வரை

    நவம்பர் 27-ம் தேதியில் இருந்து டிசம்பர் 3-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    27-ந்தேதி (செவ்வாய்) :

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட பூமாலை சூடியருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
    * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.
    * இன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது நன்மை தரும்.
    * மேல்நோக்கு நாள்.

    29-ந்தேதி (வியாழன்) :

    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * கீழ்நோக்கு நாள்.

    30-ந்தேதி (வெள்ளி) :

    * மகா தேவாஷ்டமி.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
    * திருவாஞ்சியம், திருநாகேஸ்வரம் ஆகிய தலங்களில் சிவபெருமான் கடைஞாயிறு உற்சவம் ஆரம்பம்.
    * கீழ்நோக்கு நாள்.

    1-ந்தேதி (சனி) :

    * மெய்பொருள் நாயனார் குருபூஜை.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
    * திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோவிலில் சுவாமி புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    2-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * ஆனாய நாயனார் குரு பூஜை.
    * திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் சுவாமி புறப்பாடு.
    * திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    * இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.
    * சமநோக்கு நாள்.

    3-ந்தேதி (திங்கள்) :

    * சர்வ ஏகாதசி.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * திருச்சானூர் பத்மாவதி தாயார் புறப்பாடு கண்டருளல்.
    * திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி பவனி.
    * திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.
    * சமநோக்கு நாள்.
    Next Story
    ×