search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் 20.11.2018 முதல் 26.11.2018 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் 20.11.2018 முதல் 26.11.2018 வரை

    நவம்பர் மாதம் 20-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 26-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    20-ந்தேதி (செவ்வாய்) :

    * துளசி விவாகம்.
    * பிரதோஷம்.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மகா ரத உற்சவம்.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு.
    * தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு கண்டருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
    * சகல சிவன் கோவில்களிலும் இன்று நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
    * சமநோக்கு நாள்.

    21-ந்தேதி (புதன்) :


    * மிலாடி நபி.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் வெள்ளி விமானத்திலும், குதிரை வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    22-ந்தேதி (வியாழன்) :

    * வைகாசன தீபம்.
    * பவுர்ணமி.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை கண்ணாடி விமானத்திலும், இரவு கயிலாய வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா.
    * நத்தம் மாரியம்மன் கோவிலில் லட்ச தீப காட்சி.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பட்டாபிஷேகம், தங்கக் குதிரையில் பவனி.
    * திருப்போரூர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம்.
    * கீழ்நோக்கு நாள்.

    23-ந்தேதி (வெள்ளி) :

    * திருக்கார்த்திகை.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீபம், இரவு தங்க விருட்ச சேவை.
    * திருப்பரங்குன்றம், சுவாமிமலை முருகன் கோவில்களில் ரத உற்சவம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
    * குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் நாராயணசாமி விசேஷ அலங்காரம்.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    * கீழ்நோக்கு நாள்.



    24-ந்தேதி (சனி) :

    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் சுவாமி புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    25-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * திருவண்ணாமலை அபிதகுசாம்பிகை சமேத அருணாசலேஸ்வரர் கயிலாசகிரி பிரதட்சணம், பராசக்தி அம்மன் தெப்ப உற்சவம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
    * சமநோக்கு நாள்.

    26-ந்தேதி (திங்கள்) :

    * சங்கடஹர சதுர்த்தி.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.
    * மேல்நோக்கு நாள்.
    Next Story
    ×