search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் 13.11.2018 முதல் 19.11.2018 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் 13.11.2018 முதல் 19.11.2018 வரை

    நவம்பர் மாதம் 13-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 19-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    13-ந்தேதி (செவ்வாய்) :

    * கந்தசஷ்டி, சூரசம்ஹாரம்.
    * சகல முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழா.
    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் யானை வாகனத்தில் பவனி.
    * சிக்கல் சிங்காரவேலவர் தங்க ஆட்டுக்கிடா வாகனத்தில் தாரக சிங்கமுக அசுரர்களை சங்கரித்து, சூரபத்மனை ஆட்கொள்ளும் நிகழ்வு, இந்திர விமானத்தில் திருக்காட்சி.
    * வள்ளியூர் முருகப்பெருமான் காலையில் வெள்ளை சாத்தி தரிசனம், மாலையில் பச்சை சாத்தி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    14-ந்தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * சகல முருகன் கோவில்களிலும் தெய்வானை திருக்கல்யாணம்.
    * சிக்கல் சிங்காரவேலவர் மாலை தங்க குதிரையில் பவனி, இரவு தெய்வானையை மணந்து வெள்ளி ரதத்தில் காட்சி.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * மேல்நோக்கு நாள்.

    15-ந்தேதி (வியாழன்) :

    * மாயவரம் கவுரிமாயூரநாதர் கோவில் ரத உற்சவம்.
    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் வெண்ணெய் தாழி சேவை.
    * சிக்கல் சிங்காரவேலவர் வள்ளிதேவியை மணந்து இந்திர விமானத்தில் உலா.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை சூரிய பிரபையிலும், இரவு இந்திர விமானத்திலும் பவனி.
    * சுவாமிமலை முருகப்பெருமான், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயங்களில் உற்சவம் தொடக்கம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    16-ந்தேதி (வெள்ளி) :

    * கடைமுக நீராடல்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருவனந்தல் ஆரம்பம்.
    * மாயவரம் கவுரிநாதர் கடைமுகம் தீர்த்தம்.
    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் கோவில் ரத உற்சவம்.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை பூத வாகனத்திலும், இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.
    * சுவாமிமலை முருகப்பெருமான் உடும்பு வாகனத்தில் வீதி உலா.
    * சிக்கல் சிங்காரவேலவர் விடையாற்று உற்சவம்.
    * மேல்நோக்கு நாள்.



    17-ந்தேதி (சனி) :


    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
    * சபரிமலை அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை சேஷ வாகனத்திலும், இரவு சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வீதி உலா.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் பவனி.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை.
    * மேல்நோக்கு நாள்.

    18-ந்தேதி (ஞாயிறு) :

    * வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி திருக்கல்யாணம்.
    * திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை ரிஷப வாகனத்திலும், இரவு சுவாமி பெரிய விருட்ச வாகனத்திலும் பவனி.
    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    19-ந்தேதி (திங்கள்) :

    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை வெள்ளி யானை வாகனத்தில் அறுபத்திமூவருடன் பவனி, இரவு சுவாமி வெள்ளி ரதத்திலும், அம்பாள் இந்திர விமானத்திலும் புறப்பாடு.
    * திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×