search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் 16.10.2018 முதல் 22.10.2018 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் 16.10.2018 முதல் 22.10.2018 வரை

    அக்டோபர் 16-ம் தேதியில் இருந்து அக்டோபர் 22-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    16-ந்தேதி (செவ்வாய்) :

    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் புறப்பாடு கண்டருளல்.
    * குரங்கணி முத்துமாலையம்மன் பவனி வருதல்.
    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி.
    * திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் ஊஞ்சல் காட்சி.
    * கீழ்நோக்கு நாள்.

    17-ந்தேதி (புதன்)

    * துர்க்காஷ்டமி. :
    * பாபநாசம் சிபபெருமான் பவனி.
    * மதுரை மீனாட்சி அம்மன் கொலு தர்பார் காட்சி.
    * திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் சேவை.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி.
    * மேல்நோக்கு நாள்.

    18-ந்தேதி (வியாழன்) :

    * சரஸ்வதி பூஜை.
    * திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் முத்தங்கி சேவை.
    * சகல சிவன் கோவில்களிலும் விஷூ தீர்த்தம்.
    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவில் தீர்த்தாபிஷேகம்.
    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சிறப்பு வழிபாடு.
    * திருவம்பல், பாபநாசம், திருக்குற்றாலம் ஆகிய சிவன் கோவில்களில் இறைவனுக்கு விஷூ உற்சவ தீர்த்தவாரி.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    19-ந்தேதி (வெள்ளி) :

    * முகூர்த்த நாள்.
    * விஜயதசமி.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் வசந்த உற்சவ பங்களாவுக்குச் சென்று, வன்னி மரத்தடியில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
    * திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் சேவை.
    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலய தசரா பெருவிழா, சூரசம்ஹாரம்.
    * மேல்நோக்கு நாள்.

    20-ந்தேதி (சனி) :

    * சர்வ ஏகாதசி.
    * திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் சேவை.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    21-ந்தேதி (ஞாயிறு) :

    * மதுரை கள்ளழகர், மலைமேல் தொட்டிக்கு எழுந்தருளி, எண்ணெய்க் காப்பு உற்சவம் கண்டருளல்.
    * திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் சேவை.
    * திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
    * இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
    * மேல்நோக்கு நாள்.

    22-ந்தேதி (திங்கள்) :

    * பிரதோஷம்.
    * நாங்குநேரி உலகநாயகி அம்மன் கோவில் வருசாபிஷேகம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் சேவை.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
    * சகல சிவன் கோவில்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×