search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் - 7.8.2018 முதல் 13.8.2018 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் - 7.8.2018 முதல் 13.8.2018 வரை

    ஆகஸ்டு 7-ம் தேதி முதல் ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    7-ந்தேதி (செவ்வாய்) :

    * சர்வ ஏகாதசி.
    * நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் பெரிய கிளி வாகனத்தில் வீதி உலா, மாலை வேணுகோபால அலங்காரம்.
    * நயினார்கோவில் சவுந்திரநாயகி அம்மன் ஆடி வரும் திருக்கோல காட்சி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தந்த பரங்கி நாற்காலியிலும், ரெங்கமன்னார் அனுமன் வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சக்தி அழைப்பு விழா.
    * மேல்நோக்கு நாள்.

    8-ந்தேதி (புதன்) :

    * நயினார்கோவில் சவுந்திரநாயகி வேணுகாண கிருஷ்ணமூர்த்தி அலங்காரத்தில் காட்சி தருதல்.
    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா, இரவு சிறப்பு அலங்கார வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு.
    * நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் காலை கமல வாகனத்தில் வீதி உலா.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ரெங்கமன்னார் கோவர்த்தன கிரியிலும் பவனி.
    * சமநோக்கு நாள்.

    9-ந்தேதி (வியாழன்) :

    * பிரதோஷம்.
    * மாத சிவராத்திரி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஐந்து திருவடி சேவை, பெரியாழ்வார் ஆண்டாள் அம்ச வாகனத்தில் பவனி.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க விருட்ச சேவை.
    * நயினார்கோவில் சவுந்திரநாயகி கோலாட்ட அலங்காரத்தில் திருக்காட்சி.
    * இருக்கன்குடி மாரியம்மன் வீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    10-ந்தேதி (வெள்ளி) :


    * போதாயன அமாவாசை.
    * இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா.
    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் ரத உற்சவம்.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை தங்கப் பல்லக்கிலும், இரவு மின் விளக்கு அலங்கார வெள்ளி தேரிலும் பவனி.
    * திருவாடானை சிநேக வள்ளியம்மன் வெண்ணெய் தாழி சேவை, இரவு கமல வாகனத்தில் வீதி உலா.
    * நயினார்கோவில் சவுந்திரநாயகி வீணை சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி தருதல்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தண்டியலிலும், ரெங்கமன்னார் யானை வாகனத்திலும் வீதி உலா.
    * திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை.
    * மேல்நோக்கு நாள்.



    11-ந்தேதி (சனி) :

    * ஆடி அமாவாசை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணாடிச் சப்பரத்தில் வீதி உலா, ஆண்டாள் மடி மீது ரெங்கமன்னார் சயன திருக்கோலக் காட்சி.
    * காரையார் சொரிமுத்தையனார் கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தீர்த்தாபிஷேகம்.
    * மதுரை கள்ளழகர் கருட சேவை.
    * சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பெருந்திருவிழா.
    * நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் மகிஷாசுர சம்ஹார லீலை.
    * நயினார்கோவில் சவுந்திரநாயகி சிவலிங்க பூஜை செய்தருளல்.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை தங்கப்பல்லக்கில் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.

    12-ந்தேதி (ஞாயிறு) :

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி, திருவாடானை சிநேக வள்ளியம்மன் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
    * நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கண்ணாடி சப்பரத்தில் பவனி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்பப் பல்லக்கில் வீதி உலா.
    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி விமானத்தில் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    13-ந்தேதி (திங்கள்) :

    * ஆடிப்பூரம்.
    * அங்கமங்களம் அன்னபூரணி வளைகாப்பு உற்சவம்.
    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பார்வதி அம்மன் முளைக்கொட்டு ஊஞ்சல்.
    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சப்தாவரணம்.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை தங்கப் பல்லக்கில் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.

    Next Story
    ×