search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் - 3.7.2018 முதல் 9.7.2018 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் - 3.7.2018 முதல் 9.7.2018 வரை

    ஜூலை மாதம் 3-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 9-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    3-ந்தேதி (செவ்வாய்) :

    * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    4-ந்தேதி (புதன்) :

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    5-ந்தேதி (வியாழன்) :

    முகூர்த்த நாள்.
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    மேல்நோக்கு நாள்.

    6-ந்தேதி (வெள்ளி) :

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளிய பின் தங்கப் பல்லக்கில் வீதி உலா.
    * கீழ் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
    * தேவகோட்டை ரெங்கநாதர் பவனி வருதல்.
    * திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.



    7-ந்தேதி (சனி) :

    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
    * இன்று கருட தரிசனம் நன்று.
    * சமநோக்கு நாள்.

    8-ந்தேதி (ஞாயிறு) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
    * திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் சிவபெருமான் அயன உற்சவம் தொடக்கம்.
    * கீழ் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * திருப்போரூர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
    * இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
    * கீழ்நோக்கு நாள்.

    9-ந்தேதி (திங்கள்) :

    * சர்வ ஏகாதசி.
    * கார்த்திகை விரதம்.
    * குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் இன்று முதல் மூன்று நாட்கள் உற்சவம்.
    * திருவையாறு ஐயாறப்பன் ஆலயத்தில் சுவாமி புறப்பாடு.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * கீழ்நோக்கு நாள். 
    Next Story
    ×