search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் - 17.4.2018 முதல் 23.4.2018 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் - 17.4.2018 முதல் 23.4.2018 வரை

    ஏப்ரல் மாதம் 17-ம் தேதியில் இருந்து 23-ம் தேதி வரை நடிக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    17-ந்தேதி (செவ்வாய்) :

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சீராக்கரி நைவேத்தியம்.
    சமயபுரம் மாரியம்மன் திருத்தேர் விழா, அக்னி சட்டி ஊர்வலம்.
    வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேக விழா.
    கோயம்புத்தூர் தண்டு மாரியம்மன் கோவில் உற்சவம்.
    கீழ்நோக்கு நாள்.

    18-ந்தேதி (புதன்) :

    அட்சயத் திருதியை
    கார்த்திகை விரதம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ் வரர் கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம், சுவாமியும் அம்பாளும் கற்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனத்தில் வீதி உலா.
    திருச்சி ரத்தினாவதி அம்மையாருக்கு திருத்துலாய் வழங்குதல், இரவு சுவாமியும் அம்பாளும் விருட்சபாரூடராய் அறுபத்து மூவருடன் பவனி.
    கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் 12 கருட சேவை.
    கீழ்நோக்கு நாள்.

    19-ந்தேதி (வியாழன்) :

    சதுர்த்தி விரதம்.
    திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் சித்திரை உற்சவம் தொடக்கம்.
    ஆறுமுகமங்கலம் 1001 விநாயகர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோவிலில் உற்சவம் தொடக்கம்.
    தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பூத, அன்ன வாகனத்தில் வீதி உலா.
    சமயபுரம் மாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி.
    திருச்சி, திருப்பனந்தாள், சீர்காழி ஆகிய தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாண வைபவம்.
    மேல்நோக்கு நாள்.

    20-ந்தேதி (வெள்ளி) :

    முகூர்த்த நாள்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்.
    பாளையங்கோட்டை திரிபுரந்தேஸ்வரர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கயிலாய மற்றும் காமதேனு வாகனத்தில் வீதி உலா.
    ஆறுமுகமங்கலம் 1001 விநாயகர் அன்ன வாகனத்தில் பவனி.
    சமநோக்கு நாள்.



    21-ந்தேதி (சனி) :

    சஷ்டி விரதம்.
    உத்திரகோஷமங்கை கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் வீதி உலா.
    தூத்துக்குடி பாகம்பிரியாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு, சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.
    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    மேல்நோக்கு நாள்.

    22-ந்தேதி (ஞாயிறு) :

    முகூர்த்த நாள்.
    தூத்துக்குடி பாகம்பிரியாள் ஆலயத்தில் சுவாமியும் அம்பாளும் வெள்ளி விருட்ச சேவை.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வேடர் பரி லீலை, இருவரும் குதிரை வாகனத்தில் வீதி உலா.
    மதுரை, திருச்சி, திருவையாறு, திருக்கடவூர், சீர்காழி, திருப்பனந்தாள், சங்கரநயினார் கோவில் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
    சமநோக்கு நாள்.

    23-ந்தேதி (திங்கள்) :

    திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் ஆலயத்தில் சுவாமி மயில் வாகனத்தில் பவனி.
    நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் புறப்பாடு.
    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.
    ஆறுமுகமங்கலம் 1001 விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா.
    மேல்நோக்கு நாள்.

    Next Story
    ×