search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் - 23.1.2018 முதல் 29.1.2018 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் - 23.1.2018 முதல் 29.1.2018 வரை

    23.1.2018 முதல் 29.1.2018 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    23-ந்தேதி (செவ்வாய்) :

    * சஷ்டி விரதம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வெள்ளி சிம்மானத்தில் சுவாமி பவனி.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, இரவு தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.
    * திருச்சேறை சாரநாதர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    * காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் திருவீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    24-ந்தேதி (புதன்) :

    * ரத சப்தமி.
    * திருப்பதியில் வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் ரத சப்தமி திருவிழா.
    * திருச்சேறை சாரநாதர் சூரிய பிரபையில் பவனி, வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சியருளல்.
    * கோவை பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் உற்சவம் ஆரம்பம்.
    * காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் கருட சேவை.
    * திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் சிம்மாசனத்தில் பவனி.
    * சமநோக்கு நாள்.

    25-ந்தேதி (வியாழன்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலி கட்டின திருவிளையாடல், ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
    * திருச்சேறை சாரநாதர், பரமபதநாதராக சேஷ வாகனத்தில் வீதி உலா.
    * பழனி முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பச்சைக் குதிரை வாகனத்தில் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    26-ந்தேதி (வெள்ளி) :

    * கார்த்திகை விரதம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி நந்தீஸ்வரர் வாகனத்திலும், அம்பாள் யாழி வாகனத்திலும் பவனி.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சின்ன வைரத் தேரில் ரத உற்சவம், இரவு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.
    * திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட சேவை.
    * கோவை பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.



    27-ந்தேதி (சனி) :

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலையில் தந்த பல்லக்கில் பவனி, மாலையில் தங்க குதிரையில் சுவாமியும், தங்கப் பல்லக்கில் அம்பாளும் வீதி உலா.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்தில் தெப்ப உற்சவம், இரவு தங்க தேரில் சூரசம்கார காட்சி.
    * திருச்சேறை சாரநாதர் ராம அவதார காட்சி அருளல்.
    * கோவை பாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் வீதி உலா.
    * மேல்நோக்கு நாள்.

    28-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * வைஷ்ணவ ஏகாதசி.
    * திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாண உற்சவம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரத்தில் சுவாமி வீதி உலா.
    * மதுரை மீனாட்சி காரை எடுப்பு தேரில் பவனி.
    * காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் ரத உற்சவம்.
    * கோவை பாலதண்டாயுதபாணி அன்ன வாகனத்தில் புறப்பாடு.
    * குன்றக்குடி முருகப்பெருமான் வெள்ளி கேடயத்தில் பவனி.
    * சமநோக்கு நாள்.

    29-ந்தேதி (திங்கள்) :

    * பிரதோஷம்.
    * காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு.
    * திருச்சேறை சாரநாதர் சூர்ணோற்சவம்.
    * கோவை பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் பவனி.
    * பழனி முருகப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும் வீதி உலா.
    * சகல சிவன் கோவில்களிலும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
    * மேல்நோக்கு நாள்.

    Next Story
    ×