search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (31.10.2017 முதல் 6.11.2017 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (31.10.2017 முதல் 6.11.2017 வரை)

    31.10.2017 முதல் 6.11.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    31-ந் தேதி (செவ்வாய்) :

    * சர்வ ஏகாதசி.
    * மதுரை கள்ளழகர் சயனக் கோலத்தில் காட்சியருளல்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
    * திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
    * திருமோகூர் காளமேகப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    1-ந் தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * பிரதோஷம்.
    * வள்ளியூர் சுப்பிரமணியர் கோவிலில் வள்ளி திருக்கல்யாணம்.
    * மதுரை கள்ளழகர் மலை மேல் தொட்டிக்கு எழுந்தருளி, எண்ணெய் காப்பு உற்சவம் கண்டருளல்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
    * திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள், ஊஞ்சல் உற்சவ சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    2-ந்தேதி (வியாழன்) :

    * முகூர்த்த நாள்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் கோவில் உற் சவம் ஆரம்பம்.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
    * சமநோக்கு நாள்.



    3-ந்தேதி (வெள்ளி) :

    * பவுர்ணமி பூஜை.
    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம்.
    * மதுரை சுந்தரேஸ்வரர் கோவில் அன்னாபிஷேகம்.
    * தென்காசி உலகம்மை, வீரவ நல்லூர் மரகதாம்பிகை, தூத்துக்குடி பாகம்பிரியாள், சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆகிய தலங்களில் உற்சவம் தொடக்கம்.
    * கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் பவனி வருதல்.
    * சமநோக்கு நாள்.

    4-ந்தேதி (சனி) :

    * கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவிலில் விருட்ச சேவை.
    * திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.
    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் திருவீதி உலா.
    * தென்காசி உலகம்மை ஆலயத்தில் அம்மன் வீதி உலா.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    5-ந்தேதி (ஞாயிறு) :

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை கமல வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா.
    * இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
    * கீழ்நோக்கு நாள்.

    6-ந்தேதி (திங்கள்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * மேல்நோக்கு நாள்.
    Next Story
    ×