search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (15.8.2017 முதல் 21.8.2017 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (15.8.2017 முதல் 21.8.2017 வரை)

    15.8.2017 முதல் 21.8.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    15-ந்தேதி (செவ்வாய்)

    * கார்த்திகை விரதம்.
    * குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.
    * விராலிமலை முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம்.
    * கீழ்நோக்கு நாள்.

    16-ந்தேதி (புதன்)

    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை.
    * கீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    17-ந்தேதி (வியாழன்)

    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * திருவள்ளூர் வீரராகவ பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆகிய தலங்களில் புறப்பாடு கண்டருளல்.
    * பிள்ளையார்பட்டி, தேவகோட்டை, திருவலஞ்சுழி ஆகிய தலங்களில் உள்ள விநாயகப்பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம்.
    * சமநோக்கு நாள்.

    18-ந்தேதி (வெள்ளி)

    * சர்வ ஏகாதசி.
    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை சண்முகர் உருகு சட்ட சேவை.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
    * திருமோகூர் காளமேகப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்தில் பவனி.
    * மேல்நோக்கு நாள்.

    19-ந்தேதி (சனி)

    * சனிப் பிரதோஷம்.
    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறுமுக நயினார் காலை வெள்ளைசாத்தி, பகலில் பச்சை சாத்தி தரிசனம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.
    * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனத்தில் பவனி.
    * சமநோக்கு நாள்.

    20-ந்தேதி (ஞாயிறு)


    * மாத சிவராத்திரி.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.
    * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் பவனி.
    * உப்பூர் விநாயகர் யானை வாகனத்தில் திருவீதி உலா.
    * மேல்நோக்கு நாள்.

    21-ந்தேதி (திங்கள்)


    * அமாவாசை சோமவாரம்.
    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரத உற்சவம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
    * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் பவனி.
    * திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விபீஷ்ண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை கஜமுக சூரசம்ஹாரம்.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×