search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (25.7.2017 முதல் 31.7.2017 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (25.7.2017 முதல் 31.7.2017 வரை)

    25.7.2017 முதல் 31.7.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    25-ந்தேதி (செவ்வாய்) :

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் முளைக்கொட்டு உற்சவம் ஆரம்பம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணாடி சப்பரத்தில் ஆண்டாள் மடி மீது ரெங்கமன்னார் சயன சேவை.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் திருவாடானை சிநேக வள்ளியம்மன், நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன், நயினார் கோவில் சவுந்தரநாயகி அம்மன் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
    * கீழ்நோக்கு நாள்.

    26-ந்தேதி (புதன்) :

    * நாக சதுர்த்தி.
    * சதுர்த்தி விரதம்.
    * அங்கமங்கலம் அன்னபூரணி அம்மன் வளைகாப்பு உற்சவம்.
    * திருச்செந்தூர் சுப்பிர மணியர் கோவிலில் பார்வதி அம்மன் முளைக்கொட்டு ஊஞ்சல்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்ப பல்லக்கிலும் ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் வீதி உலா.
    * நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் பீங்கான் ரதத்தில் சரஸ்வதி அலங்கார காட்சி.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப் பல்லக்கு.
    * கீழ்நோக்கு நாள்.

    27-ந்தேதி (வியாழன்) :

    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரத உற்சவம்.
    * சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆடித்தபசு உற்சவம் ஆரம்பம்.
    * திருவாடானை சிநேக வள்ளியம்மன் தபசுக் காட்சி, சுவாமி விருட்ச வாகனத்தில் இரவு அலங்காரத்துடன் புஷ்பப் பல்லக்கு.
    * நயினார் கோவில் சவுந்தர நாயகி தபசுக் காட்சி, சுவாமி வெள்ளி விருட்ச சேவை, இரவு சயன அலங்காரத்துடன் புஷ்பப் பல்லக்கில் திருக்கல்யாண வைபவம்.
    * கீழ்நோக்கு நாள்.

    28-ந்தேதி (வெள்ளி) :


    * முகூர்த்த நாள்.
    * கருட பஞ்சமி.
    * சஷ்டி விரதம்.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளியம்மன் ஆகிய தலங்களில் திருக்கல்யாண வைபவம்.
    * நயினார்கோவில் சவுந்தரநாயகி மின்விளக்கு திப அலங்கார ரதத்தில் திருமண கோலத்துடன் பவனி.
    * மேல்நோக்கு நாள்.

    29-ந்தேதி (சனி) :

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
    * மதுரை கள்ளழகர் ஆடி உற்சவம் ஆரம்பம்.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளியம்மன், நயினார்கோவில் சவுந்தரநாயகி அம்மன் ஆகிய தலங்களில் ஊஞ்சல் உற்சவ காட்சி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் புறப்பாடு.
    * திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    30-ந்தேதி (ஞாயிறு) :


    * சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் ஊஞ்சலில் காட்சியருளல்.
    * மதுரை மீனாட்சி கிளி வாகனத்தில் பவனி.
    * சமநோக்கு நாள்.

    31-ந்தேதி (திங்கள்) :

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிச் சப்பரம்.
    * திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில், சேரமான் பெருமாள் கயிலாயம் செல்லுதல்.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா. இரவு சுவாமி- அம்பாள் ஏக சிம்மாசனத்தில் பவனி.
    * மதுரை மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.
    Next Story
    ×