search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (27.6.2017 முதல் 3.7.2017 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (27.6.2017 முதல் 3.7.2017 வரை)

    27.6.2017 முதல் 3.72017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    27-ந்தேதி (செவ்வாய்) :

    * சதுர்த்தி விரதம்.
    * சிதம்பரம், ஆவுடையார் கோவில் ஆகிய திருத் தலங்களில் சிவபெருமான் பவனி.
    * ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி அனுமன் வாகனத்தில் புறப்பாடு.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
    * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    28-ந் தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * சிதம்பரம் நடராஜமூர்த்தி தங்க ரதத்தில் பிட்சாடனராக காட்சி அருளல்.
    * திருக்கோளக்குடி கண்டதேவி, கானாடுகாத்தான் ஆகிய தலங்களில் சிவ பெருமான் உற்சவம் ஆரம்பம்.
    * ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கருட வாகனத்தில் திருவீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.

    29-ந் தேதி (வியாழன்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி உற்சவம் ஆரம்பம்.
    * ராஜபாளையம், திருப்பரங்குன்றம், மதுரை, திருஉத்திரகோசமங்கை, திருப்பாப் புலியூர் ஆகிய தலங்களில் ஆனி உற்சவம் தொடக்கம்.
    * ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி சேஷ வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
    * திருமயம் ஆண்டாள் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.



    30-ந் தேதி (வெள்ளி) :

    * முகூர்த்த நாள்.
    * ஆனித் திருமஞ்சனம்
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
    * சிதம்பரம் நடராஜர் ஆனித் திருமஞ்சன உற்சவம்.
    * ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி திருக்கல்யாண வைபவம், இரவு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஊஞ்சல் சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    1-ந் தேதி (சனி) :

    * ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி இந்திர விமானத்தில் பவனி வரும் காட்சி, இரவு புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா.
    * மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சல் உற்சவம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் தங்க பூத வாகனத்திலும், அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.



    2-ந் தேதி (ஞாயிறு) :


    * திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதிஉலா.
    * கண்டதேவி, கானாடுகாத்தான் ஆகிய தலங்களில் சிவபெருமான் திருகல்யாண காட்சி.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி கோவில் உற்சவம் தொடக்கம்.
    * சமநோக்கு நாள்.

    3-ந் தேதி (திங்கள்) :

    * முகூர்த்த நாள்.
    * சென்னை திருவல்லிக்கேணி நரசிம்ம சுவாமி கோவிலில் ஆனி உற்சவம் ஆரம்பம்.
    * மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆகிய தலங் களில் ஊஞ்சல் சேவை.
    * ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோவில் ரத உற்சவம்.
    * திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் உற்சவம் தொடக்கம்.
    * சமநோக்கு நாள்.
    Next Story
    ×