search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (6.6.2017 முதல் 12.6.2017 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (6.6.2017 முதல் 12.6.2017 வரை)

    6.6.2017 முதல் 12.6.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    6-ந்தேதி (செவ்வாய்) :

    * பிரதோஷம்.
    * சோழவந்தான் ஜெனக மாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம், இரவு புஷ்பப் பல்லக்கில் அம்மன் வீதி உலா.
    * பழனி முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்.
    * திருப்பத்தூர் திருத்தணி நாதர், காளையார்கோவில் சிவபெருமான், உத்தமர்கோவில் சிவபெருமான் தலங்களில் ரத உற்சவம்.
    * திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் காலை கன்றால் மேய்ந்த சேவை அருளல்.
    * சமநோக்கு நாள்.

    7-ந்தேதி (புதன்)

    * வைகாசி விசாகம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சங்காபிஷேகம்.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பாலாபிஷேகம்.
    * பழனி முருகப்பெருமான் கோவிலில் ரத உற்சவம்.
    * திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.
    * காட்டுபரூர் ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாண வைபவம்.
    * கீழ்நோக்கு நாள்.



    8-ந்தேதி (வியாழன்)

    * முகூர்த்த நாள்.
    * மதுரை கூடலழகர் சமேத நாச்சியார்களுடன் ரத உற்சவம்.
    * திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.
    * திருமோகூர் காளமேகப் பெருமாள் புஷ்பக விமானத்தில் பவனி.
    * காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா.
    * பழனி முருகப்பெருமான் தந்த பல்லக்கில் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    9-ந்தேதி (வெள்ளி)


    * பவுர்ணமி.
    * சோழவந்தான் ஜெனக மாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
    * திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள், அரியக்குடி சீனிவாசப் பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவ பெருமாள் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
    * காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு நாச்சியார் களுடன் சந்திர பிரபையிலும் பவனி.
    * பழனி முருகப்பெருமான் தங்கக் குதிரையில் புறப்பாடு கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.

    10-ந்தேதி (சனி)

    * பழனி முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி.
    * திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் சப்தாவரணம்.
    * மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் தசாவதாரக் காட்சி.
    * அரியக்குடி சீனிவாசப் பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவ பெருமாள் ஆகிய தலங் களில் தெப்ப உற்சவம்.
    * கீழ்நோக்கு நாள்.



    11-ந்தேதி (ஞாயிறு)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கணபதி உற்சவம் தொடக்கம்.
    * திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் கோவில் விடையாற்று உற்சவம்.
    * மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு.
    * அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி.
    * சோழவந்தான் ஜெனக மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.

    12-ந்தேதி (திங்கள்)

    * குரங்கணி முத்துமாலையம்மன் கோவில் வருசாபிஷேகம்.
    * அரியக்குடி சீனிவாசப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.
    * காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ரத உற்சவம்.
    * திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் வெள்ளி ரதத்தில் புறப்பாடு.
    * சோழவந்தான் ஜெனக மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×