search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (17.1.2017 முதல் 23.1.2017 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (17.1.2017 முதல் 23.1.2017 வரை)

    17.1.2017 முதல் 23.1.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    17-ந் தேதி (செவ்வாய்) :

    * திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் வருசாபிஷேகம்.
    * திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி பிரதிஷ்டை தினம்.
    * திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை.
    * சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    18-ந் தேதி (புதன்) :

    * திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
    * இன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது நன்மை தரும்.
    * சமநோக்கு நாள்.

    19-ந் தேதி (வியாழன்) :


    * முகூர்த்த நாள்.
    * மதுரை வடக்குவாசல் செல்லாத்தம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம், சிம்மாசனத்தில் அம்பாள் பவனி.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * சமநோக்கு நாள்.

    20-ந் தேதி (வெள்ளி) :

    * மதுரை செல்லாத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    21-ந் தேதி (சனி) :

    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
    * மதுரை செல்லாத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
    * இன்று விஷ்ணு ஆலய வழிபாடு சிறப்பு தரும்.
    * சமநோக்கு நாள்.

    22-ந் தேதி (ஞாயிறு) :

    * மதுரை செல்லாத்தம்மன் யானை வாகனத்தில் வீதி உலா.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    23-ந் தேதி (திங்கள்) :

    * முகூர்த்த நாள்.
    * சர்வ ஏகாதசி.
    * திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம், காலை சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா.
    * மதுரை செல்லாத்தம்மன் காலை சப்பரத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் புறப்பாடு.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.
    Next Story
    ×