search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள்(15-11-2016 முதல் 21-11-2016 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள்(15-11-2016 முதல் 21-11-2016 வரை)

    15-11-2016 முதல் 21-11-2016 வரை நடக்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    15-ந் தேதி (செவ்வாய்) :

    * கார்த்திகை விரதம்.
    * மாயவரம் கவுரிநாதர் கடைமுகம் தீர்த்தம்.
    * திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் கோவில் ரத உற்சவம்.
    * குரங்கணி முத்துமாலையம்மன் பவனி வருதல்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    16-ந் தேதி (புதன்) :

    * சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் நாள்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருவனந்தல் ஆரம்பம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
    * திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
    * மேல்நோக்கு நாள்.

    17-ந் தேதி (வியாழன்) :


    * சங்கடஹர சதுர்த்தி.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * இன்று விநாயகப்பெருமானை வழிபடுவது நன்மை தரும்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சமநோக்கு நாள்.

    18-ந் தேதி (வெள்ளி) :

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் வீதி உலா.
    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    19-ந் தேதி (சனி) :

    * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
    * குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
    * இன்று கருட தரிசனம் நன்று.
    * விஷ்ணு ஆலயங்களில் வழிபாடு செய்தால் நன்மை பெறலாம்.
    * சமநோக்கு நாள்.

    20-ந் தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில், அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.
    * இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
    * மேல்நோக்கு நாள்.

    21-ந் தேதி (திங்கள்) :

    * திருப்பாப்புலியூர் இறைவனுக்கு சங்காபிஷேகம். வெள்ளி இந்திர விமானத்தில் சுவாமி வீதி உலா.
    * திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×