search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (25-10-2016 முதல் 31-10-2016 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (25-10-2016 முதல் 31-10-2016 வரை)

    25-10-2016 முதல் 31-10-2016 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை பார்க்கலாம்.
    25-ந் தேதி (செவ்வாய்)) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் மாலை அம்பாள் சிவபூஜை செய்தல், இரவு சப்தாவர்ண பல்லக்கில் வீதி உலா.
    * கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் புறப்பாடு கண்டருளல்.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
    * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    26-ந் தேதி (புதன்)) :

    * சர்வ ஏகாதசி.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் தீர்த்தவாரி, இரவு தங்கச் சப்பரத்தில் தபசு காட்சி.
    * கீழ்நோக்கு நாள்.

    27-ந் தேதி (வியாழன்)) :

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் அதிகாலை தபசுக்கு புறப் படுதல், இரவு திருக்கல்யாண உற்சவம்.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன், தென்காசி உலகம்மை, கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன், வீரவநல்லூர் மரகதாம்பிகை, தூத்துக்குடி பாகம்பிரியாள் ஆகிய தலங்களில் திருக்கல்யாண வைபவம்.
    * மேல்நோக்கு நாள்.

    28-ந் தேதி (வெள்ளி)) :

    * முகூர்த்த நாள்.
    * பிரதோஷம்
    * மாத சிவராத்திரி.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்பப் பல்லக்கிலும் பட்டினப் பிரவேசம், இரவு ஊஞ்சல் சேவை.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    29-ந் தேதி (சனி)) :

    * தீபாவளி பண்டிகை.
    * திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * திருவட்டாறு ஆதிகேசப் பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் பிள்ளை லோகாச்சாரியார் ஆகிய தலங் களில் உற்சவம் ஆரம்பம்.
    * வள்ளியூர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
    * திருநள்ளாறு சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை.
    * சமநோக்கு நாள்.

    30-ந் தேதி (ஞாயிறு)) :

    * கேதார கவுரி விரதம்.
    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் ஊஞ்சல் சேவை.
    * வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி.
    * உத்திரமாயூரம் தட்சிணாமூர்த்தி கயிலாய பர்வதத்திலும், கங்கையம்மன் மகர வாகனத்திலும் வீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    31-ந் தேதி (திங்கள்) :

    * சகல முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி உற்சவம் தொடக்கம்.
    * சிக்கல் சிங்காரவேலவர் தங்க மச்ச வாகனத்தில் வீதி உலா.
    * வீரவநல்லூர் மரகதாம்பிகை தீர்த்தவாரி.
    * திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.
    Next Story
    ×