search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (30-8-2016 முதல் 5-9-2016 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (30-8-2016 முதல் 5-9-2016 வரை)

    30-8-2016 முதல் 5-9-2016 வரை நடக்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை பார்க்கலாம்.
    30-ந் தேதி (செவ்வாய்) :

    * மாத சிவராத்திரி.
    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, ரெங்கநாதர் திருக்கோலமாய் காட்சியளித்தல், இரவு கருட வாகனத்தில் ராஜாங்க சேவை.
    * உப்பூர் விநாயகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனத்தில் பவனி.
    * மேல்நோக்கு நாள்.

    31-ந் தேதி (புதன்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
    * பெருவயல் முருகப்பெருமான் கோவில் ரத உற்சவம்.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு விருட்ச வாகனத்திலும் பவனி.
    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி காலை ராம அவதாரத்திலும், மாலை தவழ்ந்த கண்ணன் திருக்கோலமாகவும் காட்சி தருதல்.
    * கீழ்நோக்கு நாள்.

    1-ந் தேதி (வியாழன்) :

    * அமாவாசை.
    * திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் பவனி, மாலை கஜமுக சூரசம்ஹாரம்.
    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி ஆண்டாள் திருக்கோலம், மாலை புன்னை மர கிருஷ்ணன் அலங்காரம்.
    * கீழ்நோக்கு நாள்.

    2-ந் தேதி (வெள்ளி) :

    * திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் மஞ்சள் நீராடல்.
    * உப்பூர் விநாயகப்பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, இரவு வெள்ளிக் குதிரையில் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.

    3-ந் தேதி (சனி) :

    * பலராம ஜெயந்தி.
    * திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
    * மதுரை சொக்கநாதர் ஆவணி பெருவிழா தொடக்கம்.
    * உப்பூர் விநாயகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்.
    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் வீதி உலா.
    * மேல்நோக்கு நாள்.

    4-ந் தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை திருத் தேருக்கு எழுந்தருளி சந்தனகாப்பு, இரவு யானை வாகனத்தில் வீதி உலா.
    * மதுரை சோமசுந்தரர் நாரைக்கு முக்தி அருளிய காட்சி.
    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி காலை ராஜாங்க சேவை, இரவு புஷ்ப விமானத்தில் ராம அவதார காட்சி.
    * சமநோக்கு நாள்.

    5-ந் தேதி (திங்கள்) :

    * விநாயகர் சதுர்த்தி.
    * முகூர்த்த நாள்.
    * திருவலஞ்சுழி சுவேத விநாயகர் ரத உற்சவம்.
    * சமநோக்கு நாள்.
    Next Story
    ×