search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இழந்த செல்வங்களை மீட்டுத்தரும் வராகி அம்மன் விரதம்
    X

    இழந்த செல்வங்களை மீட்டுத்தரும் வராகி அம்மன் விரதம்

    நீங்கள் இழந்த செல்வம், பணம், புகழ், கெளரவம் போன்றவைகளை பெற ஒரு எளிய விரத பரிகாரம் உள்ளது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பலரும் பல நேரங்களில் எதோ ஒரு காரணத்தால் அவர்களின் செல்வங்களை இழப்பார்கள். நல்ல புகழில் இருப்பவர்கள் புகழை இழப்பார்கள். சில நேரங்களில் சொத்துக்கள் கை நழுவி போய் விடும். இப்படி நீங்கள் இழந்த செல்வம், பணம், புகழ், கெளரவம் போன்றவைகளை பெற ஒரு எளிய விரத பரிகாரம் உள்ளது.

    நீங்கள் வராகி அம்மனை விரதம் இருந்து வழிபட்டு வந்தால் இழந்த அனைத்தையும் பெறுவீர்கள். சப்தகன்னியரில் ஒருவரும் அம்மனின் காவல் தெய்வமாகவும் இருப்பவர் வராகி அம்மன் இவர் வராகமென்னும் பன்றி முகமும் எட்டு கரங்களையும் உடையவர். இவர் இரு கரங்களிலும் தண்டமும், கலப்பையும் உள்ளது.

    வராகி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண்கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனமுருகி வேண்டுதல் வைத்தால் நீங்கள் இழந்த அனைத்தையும் திரும்ப பெறலாம். காலையில் முடியாதவர்கள் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் செய்யலாம்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலமேடு என்னும் ஊரில் அஷ்டவராகி கோவில் அமைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் என்னுமூரில் சப்தமாதாக்கள் கோவில் உள்ளது. இது செல்லியம்மன் என்னும் பெயரிலும் அறியப்படுகிறது. இங்கு வராகி அம்மனுக்கு பஞ்சமி திதியில் விரதம் இருந்து பூஜை செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
    Next Story
    ×