search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் திரயோதசி விரதம்
    X

    அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் திரயோதசி விரதம்

    விரதம் இருந்து திரயோதசி வேளையில் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபடுவதால், அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கை அமையும்.
    அமாவாசை தினத்துக்கும், பௌர்ணமி தினத்துக்கும் அடுத்து வரும் பதிமூன்றாம் திதி  'திரயோதசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் 'பிரதோஷ விரதம்.’

    மாதத்துக்கு இரு முறை திரயோதசி திதியில் கடைப்பிடிக்கப்படுவதால், இது 'திரயோதசி திதி விரதம்' என்றும் அழைக்கப்படுகிறது. அமாவாசைக்கு அடுத்து வரும்போது 'சுக்கிலபட்ச திரயோதசி' என்றும், பௌர்ணமியை  அடுத்த திரயோதசி 'கிருஷ்ணபட்ச திரயோதசி' என்றும் அழைக்கப்படுகிறது.

    பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷம், மூவுலகையும் அழிக்க இருந்த பேரழிவில் இருந்து சிவபெருமான் காப்பாற்றிய தினம்தான் திரயோதசி. எனவே, அன்றைய தினம் விரதம் இருந்து, மாலை பிரதோஷ வேளையில் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபடுவதால், அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி, சிவபெருமானின் அருளால் சந்தோஷமான வாழ்க்கை அமையும்.

    சனிக்கிழமைகளில் வருவது 'மகா பிரதோஷம்' என்று சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. புதிதாக பிரதோஷ விரதத்தை மேற்கொள்ள விரும்புவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் வரும் சனி மகா பிரதோஷ நாளில் கடைப்பிடிப்பது நல்லது. விரத நாளில் காலை முதல் மாலை வரை உபவாசம் இருக்க வேண்டும். பிரதோஷ நேரமாகிய மாலை 4:30 முதல் 7 மணி வரை ஆலயங்களுக்குச் சென்று, பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு இறைவனைத் தரிசித்த பின்னர் உணவருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
    Next Story
    ×