search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவ சதுர்த்தசி விரதம்
    X

    சிவ சதுர்த்தசி விரதம்

    மார்க்கசீரிஷ சுக்ல திரியோதசியில் ஒரு வேளை பூஜித்துச் சதுர்த்தசியில் ஆகாரமின்றிச் சிவனைப் பூசித்துச் சுவர்ண ரிஷபத்தைத் தானஞ் செய்து பௌர்ணமியில் பூஜிக்க வேண்டும்.
    மார்க்கசீரிஷ சுக்ல திரியோதசியில் ஒரு வேளை பூஜித்துச் சதுர்த்தசியில் ஆகாரமின்றிச் சிவனைப் பூசித்துச் சுவர்ண ரிஷபத்தைத் தானஞ் செய்து பௌர்ணமியில் பூஜிக்க வேண்டும்.

    இப்படி 12 மார்க்கசீரிஷ மாதங்களில் பிரதி சதுர்த்தசியைக் கோமூத்திரம், கோமயம், கோட்சாரம், சோததி, கோகிரதம், குசோதகம், பஞ்சகவ்யம், வில்வம், கற்பூரம், அறுகு, யவை, எள்ளு முதலியவைகளை மாசக் கிரமமாகப் பூசித்த விதிப்படி விரதத்தை முடித்தால் தம் பித்ருக்கள் சகோதரர் செய்த பாவங்கள் அழிதலேயன்றி 100 அசுவமேத பலனும் சிவலோக பிராப்தியும் உண்டாம்.

    இது நாரதருக்கு நந்தி சொன்னது. இது தம்பதிகள் அனுசரிக்க வேண்டியது.
    Next Story
    ×