search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விளம்பி ஆண்டு முக்கிய விரத தினங்கள்
    X

    விளம்பி ஆண்டு முக்கிய விரத தினங்கள்

    ஏப்ரல் 14-ம் தேதி விளம்பி வருடம் தொடங்கியுள்ளது. விளம்பி வருடம் முழுவதும் வரும் முக்கியமான விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    26.4.2018 வியாழன் புதன் ஜெயந்தி அன்று நவக்கிரகத்தில் புதனுக்கு பச்சை ஆடை உடுத்தி பச்சை மலர்களால் அர்ச்சனை செய்து 5 நெய் விளக்குகள் வைக்க புதன் தோஷம் விலகும்.

    28.4.2018 சனி ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபட பிறவிக்கடன்கள் தீரும்.

    29.4.2018 ஞாயிறு சித்ரா பவுர்ணமி அன்று சத்யநாராயண பூஜை செய்தால் உரிய பலன்களைப் பெறலாம்.

    28.5.2018 திங்கள்-வைகாசி விசாகம்.

    14.6.2018 வியாழன் கங்கா பூஜை. இன்று முதல் 10 நாட்கள் கங்கையில் ஸ்நானம் செய்தாலும் காசியில் இருந்து பெறப்பட்ட கங்கா தீர்த்தத்தை பூஜை செய்து தலையில் தெளித்துக் கொண்டாலும் சகல பாப நிவர்த்தி பெறலாம்.

    16.6.2018 சனி ரம்பா திருதியை இன்று கவுரி பூஜை செய்ய திருமணத் தடை ஏற்பட்ட பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

    20.6.2018 புதன் ஆனித் திருமஞ்சனம் அன்று ஸ்ரீநடராஜர் அபிஷேகம் தரிசித்தால் தொழில் போட்டியில் வெற்றி கிடைக்கும்.

    22.6.2018 வெள்ளி சக்கரத்தாழ்வார் ஜெயந்தி.

    27.6.2018 புதன் ஜேஷ்டாபிஷேகம் அன்று அபிஷேக பிரார்த்தனைகள் நிறைவேற்ற ஏற்ற தினமாகும்.

    28.6.2018 வியாழன் வடசாவித்திரி விரத தினம். இன்று கவுரி பூஜை செய்து சத்தியவான் சாவித்திரி கதை படித்தால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாயிருப்பர்.

    27.7.2018 வெள்ளி குரு பூர்ணிமா இன்று ஆசிரியர்களுக்கு உதவிகள் செய்யலாம். வஸ்திர தானம் செய்யவும்.

    3.8.2018 வெள்ளி ஆடி பதினெட்டு அன்று புண்ணிய நதிகளுக்கு பூஜை செய்து திருமாங்கல்யம் மாற்ற பெண்கள் தீர்க்க சுமங்கலியிருப்பர்.

    5.8.2018 ஞாயிறு ஆடிக்கிருத்திகை அன்று அம்பாளையும், முருகனையும் வழிபாடு செய்யவும்.

    13.8.2018 திங்கள் சொர்ண கவுரி விரதம் ஸ்ரீஆண்டாள் திருவாடிப்பூரம் இன்று கவுரி பூஜை செய்ய பெண்கள் பொன் நகைகளுடன் தீர்க்க சுமங்கலியாயிருப்பர்.

    15.8.2018 புதன் நாக பஞ்சமி, கருட பஞ்சமி அன்று நாக பூஜை செய்யவும். கருட பகவானுக்கு நெய்விளக்கு ஏற்றவும், நாகதோஷம் விலகும்.

    24.8.2018 வெள்ளி. பங்காளிகள் ஒன்றுகூடி முன்னோர் களுக்கு வழிபாடும், குலதெய்வ பூஜையும் செய்ய உகந்த நாளாகும்.

    24.8.2018 வெள்ளி வரலட்சுமி விரதம் இன்று லட்சுமி பூஜை, துளசி பூஜை செய்யவும்.

    25.8.2018 சனி. ஓணம் பண்டிகை, ஸ்ரீஹயக்ரீவ ஜெயந்தி அன்று மாணவர்கள் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை வழிபட நிறைந்த கல்வி அறிவு பெறுவர்.

    27.8.2018 திங்கள். இன்று 1008 முறை காயத்ரி ஜெபம் செய்ய சகல பாப நிவர்த்தி அடையலாம்.

    30.8.2018 வியாழன் மகா சங்கடஹர சதுர்த்தி இன்று விநாயகருக்கு அபிஷேகம் செய்ய சர்வ சங்கடங்களும் விலகும்.

    2.9.2018 ஞாயிறு கிருஷ்ண ஜெயந்தி.

    4.9.2018 செவ்வாய் சனி ஜெயந்தி இன்று நவக்கிரகங்களில் சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து 8 நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சனி தோஷம் விலகும்.

    11.9.2018 செவ்வாய் ஜெயந்தி இன்று நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து 9 நெய் விளக்குகள் வைக்க செவ்வாய் தோஷம் விலகும்.

    13.9.2018 விநாயகர் சதுர்த்தி.

    21.9.2018 வெள்ளி குரு ஜெயந்தி. இன்று நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி மஞ்சள் சாமந்தி புஷ்பங்களால் அர்ச்சனை செய்து 3 நெய் விளக்கு வைத்து வர குரு தோஷம் விலகும்.

    23.9.2018 ஞாயிறு அனந்த விரதம்.

    30.9.2018 ஞாயிறு முதல் புரட்டாசி 25-ந் தேதி (11.10.2018) வியாழன் வரை காவேரி ஆந்த்ய புஷ்கரம் தினங்களாகும். கடந்த வருடம் காவேரி புஷ்கரத்தில் புனித நீராடாமல் வாய்ப்பை தவற விட்டவர்கள் இந்த நாட்களில் காவிரியில் புனித நீராடலாம்.

    4.10.2018 வியாழன் ஸ்ரீசுக்கிர ஜெயந்தி இன்று நவக்கிரகங்களில் சுக்கிரனுக்கு வெள்ளை பட்டு வஸ்திரம் சாற்றி வெள்ளை சம்பங்கி மலர்களால் அர்ச்சனை செய்து 6 நெய் விளக்குகள் வைக்க சுக்கிர தோஷம் விலகும்.

    8.10.2018 திங்கள் மஹாலய அமாவாசை இன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் படையல் வைக்கவும் திலஹோமம் செய்யவும் ஏற்ற நாளாகும்

    9.10.2018 செவ்வாய் இன்று காமதேனு பூஜைசெய்ய ஏற்ற நாளாகும்.

    10.10.2018 புதன் நவராத்திரி ஆரம்பம்.

    12.10.2018 வெள்ளி முதல் 12 நாட்கள் தாமிர புஷ்கரம். தாமிரபரணியில் குளித்து தாமிரபரணிக்கரையில் தான தர்மங்கள், தர்ப்பணங்கள், சிராத்தங்கள், தோஷங்கள் செய்ய ஏற்ற காலமாகும். இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நிகழ்வாகும்.

    16.10.2018 செவ்வாய் பத்ரகாளி அவதார தினம். இன்று வீட்டில் தேவி பாகவதம் படித்தாலும் தொழில் ஸ்தாபனங்களில் சண்டி ஹோமம் செய்தாலும் தொழில் விருத்தியும் வழக்குகளில் வெற்றியும் பெறலாம்.

    18.10.2018 வியாழன் துலா ஸ்நானம் ஆரம்பம். இம்மாதம் ஒருமுறையாவது ஸ்ரீரங்கம் சென்று காவேரி ஸ்நானம் செய்தால் கங்கையில் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும். இன்று ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நாளாகும்.

    19.10.2018 வெள்ளி விஜயதசமி இன்று புதுத்தொழில் தொடங்கவும். வேதம் படிக்கவும், கல்வி சாலைகளுக்கு செல்லவும் உகந்த நாளாகும்.

    24.10.2018 புதன் அன்னாபிஷேகம். இன்று இரவு முழுவதும் கண்விழித்து லட்சுமி பூஜை செய்ய வருடம் முழுவதும் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

    4.11.2018 ஞாயிறு கோவஸ்த துவாதசி இன்று பிற்பகல் பிரதோஷ காலத்தில் கன்றையும் வழிபட வீட்டினுள் குழந்தைகளும், பெண்களும் உடல்நலம் பெறுவர்.

    5.11.2018 திங்கள் யமதீபம், தனத் திரயோதசி தன்வந்திரி ஜெயந்தி இன்று மாலை பிரதோஷ காலத்தில் வீட்டிற்கு வெளியே கோலமிட்டு நபர் ஒருவருக்கு ஒரு தீபம் வீதம் (குறைந்தது 5 தீபம்) தெற்கு நோக்கி வைக்க வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும். வீட்டில் தன்வந்திரி பகவானை பூஜை செய்யவும், தங்கம் வாங்கவும் உகந்த நாளாகும்.



    6.11.2018 செவ்வாய் தீபாவளி. அதிகாலை 3 முதல் 6 மணிக்குள் எண்ணை தேய்த்து குளித்து லட்சுமி பூஜை செய்ய வேண்டும்.

    7.11.2018 புதன் கேதார கவுரி விரதம் இன்று 21 ஜோடி வெற்றிலை 21 பாக்கு 21 பழங்கள் வைத்து கவுரி பூஜை செய்யவும். லட்சுமி குபேர பூஜை செய்யவும் இன்று உகந்த நாளாகும்.

    9.11.2018 வெள்ளி யமத்துவிதியை இன்று சகோதரி அழைப்பின் பேரில் சகோதரன் சகோதரி வீட்டிற்கு சென்று உணவு அருந்தி பரிசுகளை பரிமாறிக் கொள்ள இரு குடும்பத்தாரும் தீக்காயங்களுடனும் தீர்க்க சுமங்கலியாகவும் இருப்பர்.

    13.11.2018 செய்வாய் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம். இன்று முருகனை வழிபட தொழில் வெற்றி கிடைக்கும்.

    17.11.2018 சனி முடவன் முழுக்கு இன்று காவிரியில் நீராட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

    22.11.2018 வியாழன் பரணி தீபம். அண்ணாமலையார் திருக்கார்த்திகை தீபம்.

    22.11.2018 வியாழன் சந்திர ஜெயந்தி இன்று நவக்கிரகங்களில் சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்து 2 நெய்தீபங்கள் ஏற்றிவர சந்ஙதிரதோஷம் விலகும்.

    23.11.2018 வெள்ளி பாஞ்சராத்ர தீபம். இந்த நாட்களில் வீட்டில் தீபம் ஏற்ற லட்சுமி கடாட்சம் பெருகும்.

    30.11.2018 வெள்ளி கால பைரவாஷ்டமி இன்று காலபைரவரை வணங்க உகந்த நாளாகும்.

    12.12.2018 புதன் நாகபூஜா பஞ்சமி இன்று நாகதோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும்.

    16.12.2016 ஞாயிறு முதல் 30 நாட்களும் அதிகாலையில் பெருமாள் கோயில் சென்று தினசரி திருப்பாவை 30 பாசுரங்கள் படித்தால் வீட்டில் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் ஏற்படும்.

    18.12.2018 செவ்வாய் சர்வ முக்கோடி வைகுண்ட ஏகாதசி இன்று பெருமாள் கோயில் சென்று பரமபத வாசல் கடந்தால் வாழ்க்கை சொர்க்கமாகும்.

    23.12.2018 ஞாயிறு ஸ்ரீஆருத்ரா தரிசனம். இன்று நடராஜரை வழிபட்டால் தொழில் போட்டியில் வெற்றி உண்டாகும்.

    5.1.2019 சனி ஸ்ரீஆஞ்சநேயர் ஜெயந்தி. இன்று ஆஞ்சநேயரை வழிபட குறைகள் தீரும்.

    11.12.2019 வெள்ளி கூடாரைவல்லி இன்று அதிகாலை பெருமாள் கோவில் ஆண்டாள் அருளிய திருப்பாவையில் “கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா” என்று தொடங்கும் பாடலை இருமுறை பாட திருமண பாக்கியமும் தொழிலில் வெற்றியும் ஏற்படும்.

    14.1.2019 திங்கள் போகிப்பண்டிகை.

    15.1.2019 செவ்வாய் பொங்கல் பண்டிகை.

    16.1.2019 புதன் மாட்டுப் பொங்கல் காமதேனுவுக்கு பூஜை செய்யவும்.

    21.1.2019 திங்கள் தைப்பூசம் இன்று முருகனை வழிபடவும்.

    5.2.2019 செவ்வாய் முதல் 30 நாட்கள் புனித நீராடவும் தோஷ பரிகாரங்கள் செய்யவும் ஏற்ற காலமாகும்.

    9.2.2019 சனி வரகுந்த சதுர்த்தி இன்று மல்லிகைப் பூவால் சிவபூஜை செய்ய காரியத் தடைகள் நீங்கும்.

    10.2.2019 ஞாயிறு வசந்த பஞ்சமி இன்று வீட்டில் லட்சுமி பூஜை செய்ய வருடம் முழுவதும் வசந்தமாகும்.

    12.2.2019 செவ்வாய் ரத சப்தமி. இன்று பெருமாள் கோவில்களில் சூரிய பிரபையுடன் கூடிய ரத சப்தமி உற்சவம் நடைபெறும். அதை தரிசித்தால் முன்னோர்கள் திருப்தியடைவர். திருப்பதி திருமலையில் நடக்கும் ரத சப்தமி உற்சவம் மிக விசேஷம். இன்று நவக்கிரகங்களில் சூரியனுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவித்து சிகப்பு மலர்களால் அர்ச்சனை செய்து ஒரு நெய்விளக்கு வைத்துவர சூரிய தோஷம் விலகும்.

    19.2.2018 செவ்வாய் ஆகாமாவை மாசி மகம் இன்று புனித நீராடி தோஷ பரிகாரங்கள் செய்ய ஏற்ற நாளாகும்.

    4.3.2019 திங்கள் மகா சிவராத்திரி இன்று இரவு முழுவதும் கண் விழித்து 4 ஜாமங்களிலும் சிவபூஜை செய்ய அல்லது சிவ அபிஷேகத்தை நேரில் கண்டு களித்தால் சகல பாவங்களும் விலகி கைலாச பாக்கியம் கிடைக்கும்.

    6.3.2019 புதன் சிறிய திருவடி இன்று ஸ்ரீராமரையும் ஆஞ்சநேயரையும் தரிசிக்க பிரிந்த நண்பர்கள் கூடுவர்.

    15.3.2019 காரடையான் நோன்பு இன்று அதிகாலை 4- 5 கௌரி பூஜை செய்து சத்தியவான் சாவித்திரி கதை படித்தால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்.

    21-3-2019 வியாழன் பங்குனி உத்திரம் இன்று கோயில்களுக்குச் சென்று திருக்கல்யாண உற்சவம் தரிசித்தால் விரைவில் திருமணமாகும். ஸ்ரீரங்கம் சேர்த்தி உற்சவம் தரிசித்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவர்-மனைவிக்குள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் வகையில் அன்னியோன்யம் ஏற்படும்.

    13.4.2019 சனி ஸ்ரீராம நவமி. அன்று பகல்வரை விரதம் இருந்து ஸ்ரீராமரை வழிபட பித்ரு தோஷங்களும் சூரிய தோஷமும் விலகும்.
    Next Story
    ×