search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செவ்வாய் கிழமை விரத பூஜை செய்யும் முறை
    X

    செவ்வாய் கிழமை விரத பூஜை செய்யும் முறை

    இந்த விரத பூஜையை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தால் 9 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் தொடர்ந்து செய்ய வரவேண்டும்.
    இந்த விரத பூஜையை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தால் 9 வாரம் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் ராகு காலத்தில் தொடர்ந்து செய்ய வேண்டும்.

    வெள்ளிக்கிழமை ஆரம்பித்தால் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் ராகு காலத்தில் செய்ய வேண்டும்.

    முதல்வாரம் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி இரண்டு பாகங்களாக்கி சாறை வெளியேற்றி இரண்டு மூடியிலும் எண்ணெய் ஊற்றி துர்க்கை அம்மன் சந்நிதியில் விளக்கேற்ற வேண்டும். இரண்டாவது வாரம் இரண்டு எலுமிச்சை பழத்தை நறுக்கி நான்கு தீபங்கள் ஏற்ற வேண்டும்.

    மூன்றாவது வாரம் ஆறு என்று ஒவ்வொரு வாரமும் கூட்டிக் கொண்டே 9-வது வாரம் 18 விளக்குகள் ஏற்றி பூஜையை முடிக்க வேண்டும். கடைசி வாரம் பூஜை செய்யும் நாளில் எலுமிச்சை மாலை துர்க்கை அம்மனுக்கு சூட்டி, எலுமிச்சை சாதம், சுண்டல், உளுந்த வடை, தேன், பானகரம், வெற்றிலை பாக்கு, தேங்காய் பழம் படைத்து அர்ச்சனை செய்து நீல வண்ண மலர்களால் பூஜிக்க வேண்டும்.

    1. தேங்காயை துருவி அதனுடன் நாட்டுச் சர்க்கரை, காய்ந்த திராட்சை, முந்திரி, பேரிச்சம் பழம், பாதாம் பருப்பு, விஸ்தாப்பருப்பு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் இவற்றை கலந்து தேனை அதன்மீது ஊற்றி நிவேத்யத்திற்கு இதை வைக்க வேண்டும். ராகுதோஷ பரிகாரத்திற்கு இது மிகச் சிறந்ததாகும்.

    2. உளுந்தவடை, தயிர்சாதம், புளியோதரை, உளுத் தம்பருப்பு சாதம் இவற்றை ஏழைகளுக்கு அன்னதானமாக வழங்கலாம்.

    3. பாம்பு புற்றிற்கு பால் ஊற்றி ராகு காலத்தில் பூஜை செய்து வரலாம்.

    4. கருமாரி அம்மனை வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம்.

    5. சிவன் கோவிலுக்குச் சென்று சிவன், பார்வதியை வழிபட்டு அங்குள்ள நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு கருப்பு வண்ணம் கலந்த பட்டாடை சாத்தி மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்து உளுந்து தானம் செய்து வரவும். நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும்.

    6. நாகதோஷம் உள்ளவர்கள் புதியதாக நாகர் செய்து சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்யலாம்.

    7. ராகு ஜாதகத்தில் எந்த கிரகத்தினுடைய வீட்டில் உள் ளதோ அந்த கிரகத்திற்குரிய கிழமையை பார்த்து அந்த நாளில் இரவில் படுத்து உறங்கும்போது தலையணைக்கடியில் கருப்பு பேப்பரில் சிறிதளவு உளுந்து மடித்து வைத்து வரவும். காலையில் அதை எடுத்து சாமிபடம் முன் வைத்து விடவும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரவேண்டும்.

    பத்தாவது வாரம் அதைப் பிரித்து புதிய கருப்பு துணியில் கட்டி கிழக்கு முகமாக அமர்ந்து தலையை மூன்று முறைச் சுற்றி கடலிலோ ஆற்றிலோ எறிந்து விட வேண்டும். கிணற்றில் போடக்கூடாது. அதன்பிறகு சிவன் கோவில் அல்லது நாகத்தை தலைகவசமாக அணிந்த அம்மன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர வேண்டும்.

    8. திருநாகேஸ்வரம் சென்று ராகுபகவானுக்கு பால் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும்.

    9. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜருக்கு ராகு காலத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.

    10. சரபேஸ்வரரை ராகு காலத்தில் விரத வழிபட்டு அர்ச்சனை செய்து வரலாம்.

    11. கோமேதகத்தை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளலாம். ஜோதிடரின் ஆலோசனைப்படி ஜாதகத்தை காண்பித்து அணியலாமா? என்று கேட்டு எப்போது, எப்படி, எந்த நாளில் அணியலாம் என்று கேட்டு அணியவும்.

    Next Story
    ×