search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துயரம் நீக்கும் துர்க்கை விரத வழிபாடு
    X

    துயரம் நீக்கும் துர்க்கை விரத வழிபாடு

    துயரங்கள் நீங்குவதில் முதன்மையானது, துர்க்கை அம்மன் வழிபாடு. விரதமிருந்து துர்க்கையை வழிபாடு செய்வதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
    துயரங்கள் நீங்குவதில் முதன்மையானது, துர்க்கை அம்மன் விரத வழிபாடு. பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை அம்மனுக்கு தனி சன்னிதி இருப்பதைக் காணலாம்.

    * அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம். மேலும் சிவப்பு வஸ்திரத்தை அம்பாளுக்கு சாத்தியும் வழிபடலாம்.

    * விரதமிருந்து துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சண்டிகை தேவியின் சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். நல்லெண்ணெய் வழிபாடும், இந்த சகஸ்ர நாமமும் சக்தி வாய்ந்தவை.

    * துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் ‘துர்கா சப்தசதி’ என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.

    * பிறவி என்று வந்து விட்டால் கஷ்டங்கள், துன்பங்கள் வரத்தான் செய்யும். துக்கங்கள் அதிகமாகும். அந்த துக்கத்தைப் போக்குபவளே துர்க்காதேவி.

    * வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் விரதமிருந்து துர்க்காதேவியை சரண் புகுந்தால், வெற்றியும் நிவாரணமும் சித்திக்கும்.

    * மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால், துர்க்கையின் திருவடி நிழலைப் பிரார்த்திப்பதே சிறந்த வழி.

    * பரசுராமருக்கு அமரத்வம் அளித்தவள் துர்க்காதேவி. அவளது உபாசனை மனத் தெளிவைத் தரும். துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மனத் தளர்ச்சியோ, சோகமோ உண்டாவதில்லை.



    * ஸ்ரீ துர்க்கையின் வாகனம் சிம்மம். இவளுடைய கொடி ``மயில்தோகை''. இந்தத் துர்க்காவை பூஜை செய்த ஒருவன், சொர்க்க சுகத்தை அனுபவித்து பின் நிச்சயமாக மோட்சத்தையும் அடைவான்.

    * ஒரு வருட காலம் துர்க்கை அம்மனை பூஜித்து வந்தால், அந்த நபருக்கு முக்தி வசமாகும். துர்க்கை அர்ச்சனை செய்பவரின் பாவங்கள், அவனிடம் தங்குவதில்லை. தாமரை இலை தண்ணீர் போல அவனை விட்டு விலகியே நிற்கும்.

    * தூங்கும் போதும், நின்ற போதும், நடக்கும் போதும் கூட தேவி துர்க்கையை வணங்குபவனுக்கு சம்சார பந்தம் ஏற்படுவதில்லை.

    * ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு மிகவும் பிடித்த மலர், ‘நீலோத் பலம்’. இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது.

    * துர்க்கையின் முன் புல்லாங்குழல் வாத்தியம் வாசிக்கக் கூடாது.

    * துர்க்கையை ஒன்பது துர்க்கைகளாக பெயரிட்டுக் கூறுகின்றது, மந்திர சாஸ்திரம். அவை, குமாரி, த்ரிமூர்த்தி, கல்யாணி, ரோஹிணி, காளிகா, சண்டிகை, சாம்பவி, துர்க்கா, சுபத்ரா.

    * துர்க்கை என்ற சொல்லில் `த்', `உ', `ர்', `க்', `ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்' என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ' என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்' என்றால் பாவத்தை நலியச் செய்பவள். `ஆ' என்றால் பயம், சத்ரு ஆகியவற்றை அழிப்பவள் என்று பொருள்.
    Next Story
    ×